ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது தொடர்பாக...
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இரு மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைவு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடி வரை சரிந்தது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரின்றி வறண்டும்,பிரதான அருவி சினி அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி காவிரி ஆற்றின் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், திடீர் நீர்வரத்து அதிகரிப்பினால், வறண்ட ஒகேனக்கல் அருவிகளில் சற்று நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
The water flow in the Cauvery River at Hogenakkal has suddenly increased
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.