அழகே அழகு

கோவைப் பழம் போல சிவப்பான உதட்டில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அழியாமல் இருக்க வேண்டுமா? 

சினேகா

பல பெண்களின் கைப்பையில் எது இருக்குமோ இல்லையோ நிச்சயம் லிப்ஸ்டிக், லிப் க்ளாஸ், காஜல் மற்றும் ஸ்டிக்கர் பொட்டு கட்டாயம் இருக்கும். காரணம் அடிக்கடி ஒரு சிறிய கண்ணாடியில் முகத்தைப் பார்த்து லிப்ஸ்டிக் குறைந்தால் சிறிதளவு தீட்டவும், கூடியிருந்தால் டிஷ்யூ தாளில் ஒற்றியெடுக்கவும் செய்வார்கள். உதட்டில் காலை போட்ட லிப்ஸ்டிக்கின் நிறம் மங்காமல் நீண்ட நேரம் இருக்க இதோ சில டிப்ஸ் :

இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். காலையில் அதைப் பயன்படுத்தும் போது நீங்களே ஆச்சரியப்படும் வகையில் அது பளிச்சென்று இருப்பதுடன் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

இரண்டு வகையான நிறங்களை சேர்த்து மிக்ஸ் செய்து லிப்ஸ்டிக் போடாதீர்கள். இது உதடுகளின் அழகைக் கெடுத்துவிடும். அடர்த்தியான லிப்ஸ்டிக் அல்லது லைட்டான லிப்ஸ்டிக் என எது போடுவதாக இருந்தாலும் அவரவர் நிறத்துக்கும் வயதுக்கும் ஏற்ற வகையில் போட வேண்டும்.

லிப்ஸ்டிக் போடும் முன்னர், சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், உதடு நீண்ட நேரம் சிவந்திருக்கும்.

உதடுகளில் சிறிதளவு டால்கம் பவுடர் போட்ட பிறகு லிப்ஸ்டிக்கை போட்டுப் பாருங்கள். உதடுகளில் காப்பி டீ குடுக்கும் போது ஏற்படும் கறை கூட இல்லாமல் லிப்ஸ்டிக் பளிச்சென்று இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT