அழகே அழகு

குளிர்கால சரும ஆரோக்கியம்: சில குறிப்புகள்!

தினமணி

நீங்கள் கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாக பளபளப்பாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். 

சருமம் வறண்டு காணப்பட்டாலோ முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வந்தாலோ சருமத்திற்கு தேவையானவை கிடைக்கவில்லை அல்லது அதற்கு ஒவ்வாத பொருள்களை பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

சரும அழகுக்காக இன்று மெனக்கெடுபவர்கள் அதிகம். அழகு நிலையங்கள், செயற்கை ரசாயனங்களை நாடாமல் இயற்கையான வழிகளில் சரும அழகை மேம்படுத்தலாம். 

முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி பொலிவான சருமம் கிடைக்க இயற்கையான சில எளிய குறிப்புக்கள் இதோ..

► சருமத்தை அழகாக்க எலுமிச்சைச் சாறு பெரிதும் பயன்படுகிறது. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். எலுமிச்சைச் சாற்றை அப்படியே பயன்படுத்தாமல் சில துளிகள் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 

► அதுபோல மற்றொரு முறையாக, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் மெதுவாக பிய்த்து எடுத்தால் கலவையுடன் முடியும் வந்துவிடும். 

► பால், கடலை மாவு, மஞ்சள் இவற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவாக இருக்கும். 

► தக்காளிச் சாறினை முகத்தில் தடவி வந்தாலும் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கி முகம் பொலிவாகும். 

► தயிர் சரும அழகுக்கான முக்கிய பொருள். தயிரை சிறிதளவு எடுத்து முகததில் அப்படியே மசாஜ் செய்ய வேண்டும். 

► அதுபோல இரவு தூங்குவதற்கு முன்னதாக சில துளிகள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் கொண்டு முகத்தில் தடவிவிட்டு காலையில் சோப்பு கொண்டு கழுவவும்.

► சருமம் வறண்டுபோவதைத் தடுக்க கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்துங்கள். 

சருமம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பளபளப்பாக இருக்கும்.எனவே , இந்த இயற்கை வழிமுறைகளுடன் சருமம் பொலிவு பெற காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT