அழகே அழகு

பளபளப்பான சருமத்திற்கு 'மஞ்சள் தூள்' போதும்!

தினமணி

சிறந்த கிருமிநாசினியாக அனைத்து அழகுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளைப் பயன்படுத்தி பொலிவான சருமத்தைப் பெறலாம். 

நேரடியாக மஞ்சள் கிழங்குகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று கூறுகின்றனர் முன்னோர்கள். 

தற்போது பலரும் கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்துவதால் அத்துடன் சில பொருள்களை சேர்த்து பயன்படுத்தினால் சருமம் பளபளப்பாகும்.

மஞ்சள் தூளுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து முகத்தில் பூசிவர முகப்பருக்கள் முறையும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். 

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் பேக் போடுங்கள். 

அதுபோன்று பப்பாளிப் பழச்சாறு சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நீர்ச்சத்தைத் தரும். அத்துடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், பால், தேன் கலந்து முகத்தில் பேக் போடலாம். 

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்தும் பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

தேன், மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து தினமும் முகத்திற்கு பயன்படுத்துங்கள். சருமம் பொலிவு பெறும். 

உருளைக்கிழங்குச் சாறு,  தக்காளிச் சாறு - இவற்றுடனும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தடவிவர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT