ரசிக்க... ருசிக்க...

சூப்பர் டேஸ்டி வெரைட்டி கீரை போண்டா ரெசிபி இதுதான்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்தும், நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, முள்ளங்கி இலை,

லோ. சித்ரா

வெரைட்டி கீரை போண்டா

தேவையான பொருட்கள் :  

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1
அரிசி மாவு - ஒரு கிண்ணம்
சோயா மாவு - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, 
முளைக்கீரை - தலா ஒரு கிண்ணம்
பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை, 
புதினா - தலா ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிதளவு
பொடியாக நறுக்கிய -  பச்சை மிளகாய்
பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள்  - தலா ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்தும், நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, முள்ளங்கி இலை, பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சேர்த்துப் பிசைந்து பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, கடலை மாவு, சோயா மாவு சேர்த்து சிறிது உப்பு போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சூடான வெரைட்டி கீரை போண்டா தயார். வெரைட்டி கீரை போண்டாவோடு தேங்காய்ச் சட்னி சேர்த்து சாப்பிட கூடுல் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT