ரசிக்க... ருசிக்க...

ஹோட்டல் உணவைச் சுவை பார்த்துச் சொல்ல தினமும் 9,250 ரூபாய் சம்பளம்!

RKV

சிலருக்கு வீட்டு உணவைக் காட்டிலும் ஹோட்டல் உணவென்றால் ரொம்பப் பிடிக்கும். சிலருக்கோ ஹோட்டல் உணவு அறவே பிடிக்காது. அப்படிப்பட்டவர்களைப் பற்றி எந்தப் புகாரும் இல்லை. அவர்கள் மகாத்மாக்கள். வீட்டு உணவை மட்டுமே உண்டு ஆரோக்கியத்தை பேணிக் கொள்வார்கள். ஆனால், இப்போது பிரச்சினை எல்லாம் ஹோட்டல் உணவு தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லி வாரம் தவறாது ஹோட்டல்களுக்குப் படையெடுக்கிறார்களே... அவர்களைப் பற்றியது.

நம்மூரில் இவர்களுக்கு அமையக் கூடியதெல்லாம் திரிசங்கு சொர்கம் மட்டுமே. அதாகப்பட்டது. இன்று ருசியாக இருக்கிறதேயென அதே ஹோட்டலுக்கு மறுநாளும் சென்றால் அன்று சுவை மகா மட்டமாக இருந்து விடக்கூடும். இப்படியாக நிஜமான சொர்கத்தை அனுபவிக்க வாய்ப்பே இன்றி அவர்கள் சுவையான உணவை உண்டே தீருவதெனும் திரிசங்கு சொர்கக் கனவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான். எப்போதுமே பெருவாரியான ஹோட்டல்களில் உணவின் சுவை ஒரு நாளைப் போல மற்றொரு நாள் இருப்பதில்லை.

சரி, அதற்காக நாள்தோறும் ஒரே சுவையில் தரமான உணவைத் தர எந்த ஹோட்டலாவது முன் வருகிறதா என்றால் அதுவும் இல்லை.

இதெல்லாம் நம்மூர்க்கதை...

ஆனால், இதே இங்கிலாந்தில் பாருங்கள். ஒரு ஹோட்டல் நாள் தோறும் அருமையான சுவையில் பதார்த்தங்களைத் தர வேண்டும் என்ற சீரிய முயற்சியில் அதற்கென்றே சம்பளம் கொடுத்து ஆட்களை நியமிக்கும் அளவுக்கு சிரத்தையாக இருக்கிறதாம். அந்த ஹோட்டலின் பெயர் டெஃபோடில். இங்கிலாந்தின், கிராஸ்மியர் நகரத்தின் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் சமீபத்தில் தாங்கள் தயாரிக்கும் உணவை ருசி பார்த்துச் சொல்ல தினமும் 129 டாலர் சம்பளத்தில் ஆட்களை நியமித்திருக்கிறார்கள். 

தங்களது வாடிக்கையாளர்களை மேலும் மேலும் மகிழ்வித்து தேர்ந்த உணவகம் என்ற பெயரை ஈட்டுவதற்காக அந்த ஹோட்டல் நிர்வாகம் எடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி இது.

இதன் மூலமாகத் தங்களது உணவகமே இங்கிலாந்தின் சிறந்த உணவகமென நிரூபிக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதற்காக தங்களது உணவுப் பொருட்களின் சுவையைச் சோதித்து புதுப்புது சுவைகளை அறிமுகப்படுத்தவும், முந்தைய சிறந்த சுவையை நீடிக்கச் செய்யவும் அவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் அறிவித்திருக்கும் உணவைச் சுவை பார்த்துச் சொல்லும் வேலைக்காக அந்த உணவகத்தின் பிரத்யேக இணையதளத்தில் பலரும் விண்ணப்பித்திருக்கிறார்களாம்.

அந்த அறிவிப்பைக் கண்டு பலரும் வியந்து போனார்கள். ஏனெனில் அறிவிப்பின் படி தேர்வாகும் அலுவலர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம் என்பதோடு. தினமும் உணவை ருசி பார்த்துச் சொல்ல 129 டாலர் தொகையும் வழங்கப்படும் என்பதால் தான். நம்மூர் ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் தினமும் 9,250 ரூபாய் சம்பளம். 

இது நிச்சயமாக அருமையான வாய்ப்பு தான் இல்லையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT