முகப்பு
செய்திகள்

சில்லறைப் பற்றாக்குறையால் வங்கிகள் 2005 ல் தடை செய்யப்பட்ட ரூ 100 மற்றும் 50 தாள்களையும் கலந்து விநியோகிக்கின்றனவா?

வங்கிகளில் பணம் மாற்றச் செல்வோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 2005 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டு புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்ட 100 அல்லது 50 ரூபாய் தாள்கள் கலந்திருக்கின்றனவா

Updated On : 12 நவம்பர், 2016 at 3:36 PM
பகிர்:

வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் கால் கடுக்க காத்திருந்து நாள் ஒன்றுக்கு 2000 முதல் 4000 ரூபாய் வரை பணம் எடுத்துச் செல்லும் மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி எச்சரிக்கை! தற்போது நிலவி வரும் சில்லறைப் பற்றாக்குறையால் வங்கிகள் பணம் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடை செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை கலந்து அளித்துக் கொண்டு இருக்கின்றனவாம். இந்த ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் தடை செய்யப்பட்டதால்  வங்கிகளில் தேக்கப்பட்டவை.

இந்த நோட்டுக்கள் செல்லாதவை. இவற்றை கண்டுபிடித்து மாற்றிக் கொள்ள அதே வங்கிகளை அணுகினால் அவர்கள் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாமல் ரிசர்வ் வங்கியை அணுகச் சொல்வார்களாம். ரிசர்வ் வங்கியிலும் அந்த தடை செய்யப்பட்ட 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகளில் பணம் மாற்றச் செல்வோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 2005 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டு புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்ட 100 அல்லது 50 ரூபாய் தாள்கள் கலந்திருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்து விட்டு வாங்குவது நல்லது.

2005 க்குப் பிந்தைய ரூபாய் நோட்டு தானா? செல்லுமா? செல்லாதா? என இப்படித்தான் பரிசோதிக்க வேண்டுமாம்...

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.