செய்திகள்

இந்திய டிரைவிங் லைசென்ஸும், வெளிநாட்டுச் சாலைகளும்!

ராஜிராதா

இந்திய டிரைவிங் லைசென்ஸுகளை வைத்து வெளிநாடுகளில், வாகனங்களை ஓட்ட இயலுமா?

இயலும் என்கிறது இந்தத் தகவல்:
• ஆஸ்திரேலியா: வித்தியாசமான, பல பகுதிகளை தன்னிடத்தே கொண்ட இயற்கை கொழிக்கும் கண்டம் ஆஸ்திரேலியா.
ஒரு நகரத்திற்கும் மற்றொரு நகரத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டு. இங்கு நமது இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக் கொண்டு, மூன்று மாதத்திற்கு ஆஸ்திரேலியாவையே சுற்றி வந்துவிடலாம். டிராஃபிக் குறைவு என்பதால் தைரியமாகப் பயணிக்கலாம்.
• நியூஸிலாந்து: பலவித சீதோஷ்ண நிலைகளைக் கொண்ட குளிர்ந்த பூமி. அதே சமயம் ஏராளமான ஏற்ற இறக்கங்களைக் கொண்ட பகுதி. இதில் கோரமண்டல் சாலை போன்றவற்றின் மூலம், வாகனத்தில் பயணம் செய்வது திரில்லான அனுபவம். இங்கு நமது டிரைவிங் லைசென்ûஸ வைத்து கவலைப்படாமல் ஒரு வருடம் சுற்றி வரலாம்.
• நார்வே: நள்ளிரவு சூரியனை தரிசிக்க வாய்ப்பு உள்ள பூமி. ஆக அற்புதமான பல இடங்களை, பகல் வெளிச்சத்திலேயே,  இருட்டி விட்டதே என கவலைப்படாமல் பார்க்கலாம். இங்கும் இந்திய டிரைவிங் லைசென்ûஸ வைத்து மூன்று மாதம் ஓட்டலாம். உண்மையில் பலமுறை சுற்றி வரலாம்.
• பிரான்ஸ்:  இந்த நாட்டில் உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் வைத்து ஒரு வருடம், எங்கு வேண்டுமானலும் சுற்றி வரலாம். ஆனால் ஒரு கண்டிஷன், இந்திய டிரைவிங் லைசென்ஸ்ஸின், பிரான்ஸ் மொழிமாற்றம் ரெடியாக வைத்திருக்க வேண்டும். கோர்சிகா போன்ற இடங்களுக்கு வாகனத்தின் மூலம் பயணிப்பதே, படு இன்டிரஸ்டிங்காக இருக்கும்.
• ஸ்விட்சர்லாந்து: ஆல்ப்ஸ் மலை, படுதெளிவான நதித் தண்ணீர், எவ்வளவு பயணம் செய்தும் முடியாத சாலைகள் என உங்களைக் கனவு உலகத்திற்கே அழைத்துச் செல்லும் இந்த நாட்டில், உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ், ஒருவருடத்திற்குச் செல்லும். ஆனால் கட்டாயம் அவசியம். இத்தகைய வசதிகள் உலகம் முழுவதும் இருப்பதால்தான், குடும்பத்துடன் இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயணிக்கத் தவறுவதில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT