செய்திகள்

உலகம் முழுவதும் 50 ஆயிரம் பிரிண்டர்கள் முடக்கம்: ஹேக்கர் கைவரிசை

உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் பிரிண்டர்களை முடக்கி ஹேக்கர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். 

Raghavendran

உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் பிரிண்டர்களை முடக்கி ஹேக்கர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த ஹேக்கர், தி ஹேக்கர் ஜிராஃப் எனும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிவிட்டதாவது:

உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் பிரிண்டர்கள் முடங்கியதற்கு நான் தான் காரணம். இதில் முடக்கப்பட்ட பிரிண்டர்களைக் கொண்டவர்கள் உடனடியாக ஃபிய்வ்டைபை எனும் யூடியூப் சேனலை பின்தொடர வேண்டும். அதில் பிரிண்டர்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றிருந்தது.

முன்னதாக எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாத 80 ஆயிரம் பிரிண்டர்களை ரிபோஸிடரி எனும் இணைய தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து அவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 50 ஆயிரம் பிரிண்டர்களை தேர்வு செய்து முடக்கியதாக அந்த ஹேக்கர் தெரிவித்தார். முடக்கப்பட்ட பிரிண்டர்களில் 15 ஆயிரம் இந்தியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு நாளில் 1,000 கி.மீ.! 5 நாள்களில் 5,400 கி.மீ. தூரம் கடந்த பறவை!

சோலை இளங்கிளியே... கௌரி கிஷன்!

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

SCROLL FOR NEXT