செய்திகள்

பியானோ கற்றுக் கொள்வதால் மழலைகளின் மொழித்திறன் மேம்படுவதாக எம் ஐ டி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

மழலையரின் ஒட்டுமொத்த கற்றல் திறன் மற்றும் ஐக்யூ மேம்பாட்டில் இந்தக் கண்டுபிடிப்பால் பலனேதும் உண்டா என்றால், இப்போதைக்கு அதைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

RKV

கிண்டர் கார்ட்டன் பள்ளிகளில் குழந்தைகள் பியானோ கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினால் அவர்களது மொழித்திறன் அதிகரிக்கிறது என எம் ஐ டி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்வதால் மொழித்திறன் மேம்படும் என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை எனினும் இதன் மூலமாக மழலையரின் அறிவாற்றல் திறன், கற்றல் திறன், பொது அறிவுத் திறன் அனைத்தும் ஒருங்கே மேம்பாடு அடையுமா என்பது குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று வரை கிடைத்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் பியானோ கற்றுக் கொள்வதின் மூலமாக மழலையருக்கு மொழியைக் கையாளும் லாவகம் இயல்பாகவும், எளிதாகவும் கைவருகிறது. எந்தெந்த வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும். எந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் தரவேண்டும்? என்பதெல்லாம் பியானோ கற்றலின் மூலம் எளிதாகிறது என்பது தெளிவு. மற்றபடி மழலையரின் ஒட்டுமொத்த கற்றல் திறன் மற்றும் ஐக்யூ மேம்பாட்டில் இந்தக் கண்டுபிடிப்பால் பலனேதும் உண்டா என்றால், இப்போதைக்கு அதைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT