மக்கள் நீதி மய்யம் தொடங்கியதிலிருந்து உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் களத்தில் படு தீவிரமாக இருந்து வருகிறார். நேரம் இருக்கும் போதெல்லாம் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார் கமல். அரசியல் மற்றும் விஸ்வரூபம் 2 பரபரப்புக்கு இடையே மகள் அக்ஷரா ஹாசனுடன் அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார் கமல்.
அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த கமல், ‘மகள் மற்றும் பயிற்சியாளர் சூரியுடன் ஜிம்மிங் செய்கிறேன். நீ சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது பேபி, எனவே உடல் பலத்தை, சக்தியை அதிகரித்துக் கொள். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மனமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உறுதியான உடல் தான் மிக உறுதியான மனத்தை தரும்’ என்று கமல் அக்ஷராவுக்கு கூறியிருக்கிறார்.
விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் களமிறங்கவுள்ளார் கமல். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் 2018-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லட்சுமி சரவணகுமார் ஆகியோர் எழுதுகிறார்கள்.
சென்ஸார் வேலைகளும் முடிவடைந்த நிலையில் இந்த சம்மர் ஸ்பெஷலாக விஸ்வரூபம் 2 வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.