செய்திகள்

அழித்தொழிக்கப்பட்ட 12 குவிண்டால் கார்பைடு மாம்பழங்கள்! தமிழகத்தில் இது சாத்தியமா?

PTI

கெளகாத்தியில் மே 26: கெளகாத்தியில் மே 26 அன்று 12 குவிண்டால் மாம்பழங்கள் அழித்தொழிப்பு. உணவுக் ஆய்வாளர்களால் கார்பைடு ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எனக் கண்டறியப்பட்ட சுமார் 12 குவிண்டால் மாம்பழங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் அழித்தொழிக்கப் பட்டன. கெளகாத்தியின் காமரூப் மெட்ரோபொலிட்டன் மாவட்டத்திலுள்ள ஃபேன்ஸி பஜார் எனும் காய்கறி மற்றும் பழச்சந்தையில் உணவு ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்ட போது அங்கே மொத்தம் 12.5 குவிண்டால் மாம்பழங்கள் கார்பைடு ரசாயனக் கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய விற்பனைச் சந்தையாகக் கருதப்படும் இவ்விடத்தில் கண்டறியப்பட்ட இந்த மாம்பழங்கள் பொதுமக்களைச் சென்றடையும் முன் அழிக்கப்பட வேண்டும் என உணவு ஆய்வாளர்கள் குழு உத்தரவிட்டது. அதையடுத்து, மாம்பழங்களை விற்பனைக்கு வைத்த வியாபாரிகளே கைப்பற்றப்பட்ட மாம்பழங்களை உணவு ஆய்வாளர்கள் முன்னிலையில் முற்றிலுமாக அழித்தனர். அழித்தொழிக்கப் பட்ட மாம்பழங்களின் மொத்த மதிப்பு 62,000 ரூபாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT