செய்திகள்

உலகின் அதிக எடை கொண்ட சிறுவன் மீண்டும் சராசரி எடைக்கு மீண்ட கதை!

RKV

ஆர்யா பெர்மனா...

இன்றைய தேதிக்கு உலகின் அதிக எடை கொண்ட சிறுவன் இவன் தான். வயது 12, ஆனால் இவனது எடையோ 400 பவுண்டுகள். நடப்பதும் கீழே உட்கார்ந்து மீண்டும் எழுந்து நிற்பதும் கூட இவனுக்கு மிகச் சிரமம் மட்டுமல்ல மிக மிகச் சவாலான காரியங்களாகவே இருந்தன. ஏனெனில் அவனால் அசையக் கூடா முடியாத நிலையில் தான் அவன் இருந்தான். நாளின் பெரும்பான்மையான நேரங்களை அவன் செலவிட்டது படுக்கையில். இந்த நிலையில் இவன் பள்ளிக்குச் சென்றாக வேண்டிய சூழலில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து பெஞ்சில் அமர முடியாத நிலை.. அப்போது இவனுக்காக வகுப்பறையின் கடைசியில் இவனுக்கெனத் தனியாக தரைவிரிப்பு போடப்பட்டு அதில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு பாடங்களைக் கவனிப்பது அவனது வழக்கமாக இருந்தது. 

மதிய உணவாக உடன் படித்த சிறுவர்களை விட ஆறு மடங்கு அதிக உணவு இவனுக்குத் தேவைப்பட்டது. அவனுக்குப் பிடித்த உணவென்றால் அது நூடுல்ஸ், சிக்கன், அரிசிச்சாதம், மற்றும் ஐஸ்கிரீம். அதுவும் ஒவ்வொருநாளும் ஐந்து முறை பசித்து உண்டான். நாட்கள் இப்படியே சென்று கொண்டிருந்த ஒரு தருணத்தில் திடீரென ஒருநாள் அவனைப் பரிசோதித்த மருத்துவர் சொன்னார், நீ உன்னுடைய எடையைக் கட்டுக்குள் வைத்தே ஆக வேண்டும் இல்லாவிட்டால் உன்னால் இந்த அதீத எடையுடன் உயிர்வாழ முடியாது என்று எச்சரித்தார். 

12 வயதுச் சிறுவனுக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடிய எச்சரிக்கையாக இருந்த போதும் உடனிருந்த பள்ளிச் சிறுவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கம் மற்றும் நம்பிக்கை வார்த்தைகள் தந்த தைரியத்தில் எடை குறைத்து உயிர் காக்கும் அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து கொள்ள அவன் முன்வந்தான். இதோ இப்போது பாருங்கள் அவன் எப்படி இருக்கிறான் என,  இப்போதெல்லாம் அவன் தினமும் வெறும் பழங்களும், காய்கறிகளும் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அவனால் இப்போது எடை தூக்க முடிகிறது. நீந்த முடிகிறது அத்துடன் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை 6 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதையும் அவன் வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறான். இப்போது சராசரியாக நாளொன்றுக்கு 3 மைல்கள் அவனால் நடைபயிற்சி மேற்கொள்ள முடிகிறது. அத்துடன் நண்பர்களுடன் தினமும் பேட்மிண்ட்டனும் ஆடுகிறான்.

சமீப காலங்களில் அந்தச் சிறுவன் சொல்ல விரும்புவது என்ன தெரியுமா?

இப்போது எனது சந்தோசத்தை வார்த்தைகளால் என்னால் விவரிக்க இயலவில்லை. நான் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறேன். இங்கே எல்லோருமே என்னை விரும்புகிறார்கள். ஆசிரியர்கள் என்னை மிகக் கனிவாகவும் சினேகமாகவும் நடத்துகிறார்கள். எனக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், அவர்கள் என்னுடன் மிகப்ரியமாகப் பழகுகிறார்கள். இப்படி இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது என்பதே.

சிறுவனின் ஆத்மார்த்தமான சந்தோசத்துக்கும், மனநிறைவுக்கும் அடிப்படையாக அமைந்தது வெறும் அறுவை சிகிச்சை மட்டுமே என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்கு விவரம் போதவில்லை என்று அர்த்தம். அவன் இப்போதெல்லாம் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய மறப்பதில்லை. தினமும் தவறாமல் நடக்கிறான். விளையாடுகிறான். இவை அத்தனையும் தான் அவனது சந்தோசத்திற்கான அடிப்படை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT