செய்திகள்

நெகிழிக்கு மாற்றான வாழை இலைகளுக்கு கூடி வரும் மவுசு!

தமிழ்நாட்டில் நெகிழிப் பைகள் மற்றும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நெகிழிக்கு மாற்றான வாழை இலைகளின் விலை உயர்ந்து வருகிறது

RKV

தமிழ்நாட்டில் நெகிழிப் பைகள் மற்றும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நெகிழிக்கு மாற்றான வாழை இலைகளின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஜனவரி 1 முதல் நெகிழிப்பைகள், நெகிழி தம்ளர்கள், நெகிழி சார்ந்த மேலும் சில பொருட்களுக்குத் அரசு தடை விதித்துள்ளது இதையடுத்து நெகிழிக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பொருளான வாழை இலைகளின் விலை சரசரவென ஏற்றம் பெற்று வருகிறது. தேனி மாவட்டம் ஜெயமங்கலம், குள்ளபுரம், சில்வார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாழை சாகுபடி அமோகமாக இருக்கும். இந்த ஊர்களில் எல்லாம் தற்போது வாழை இலைகளுக்கான தேவை அதிகரிப்பால் 200 வாழை இலைகள் கொண்ட ஒரு கட்டு 700 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.
 

Courtesy: Puthiya Thalaimurai TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT