செய்திகள்

வீக் எண்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரிங்க!

DIN

''அந்த நீர் யானையைத் தொட்டுப் பார்த்தேன்.... சுடுதுடா! ''
"அப்போ அது வெந்நீர் யானையா இருக்கும்!...''

- இசைவாணி,  திருநெல்வேலி

"நான் சைக்கிளை வேகமா ஓட்டினேன்டா.... தலை சுத்திடிச்சு!...''
"ஆச்சரியமா இருக்கே!.... சைக்கிள் ஓட்டினா வீல்தானே சுத்தும்!....''

- டி.மோகன்தாஸ், நாகர்கோயில்

"ஒரு கூடையிலே 6 பழம் இருக்கு...., இன்னொரு கூடையிலே 5 பழம் இருக்கு...., இரண்டையும் ஒரு கூடையிலே கொட்டினா என்ன பழம் இருக்கும்?...''
"ஆரஞ்சுப் பழம் இருக்கும்!''

- தீ.அசோகன், திருவொற்றியூர்

"என்னடா இது?..... மளிகைக் கணக்கு, பால் கணக்கு, லாண்டரிக்  கணக்கெல்லாம்... கணக்கு நோட்லே எழுதிகிட்டு வந்திருக்கியே!....''
"நீங்கதானே வீட்டுக்கணக்கை சரியா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்க?...''

- க.அருச்சுனன், செங்கல்பட்டு.

"செய்வினை..., செயப்பாட்டு வினை..., விளக்க முடியுமா?''
"வீட்டுப் பாடத்தை நானே செய்தால் அது செய்வினை!..... என் அப்பா செய்து ந்தால் அது செயப்பாட்டு வினை!...''

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

* "தானத்தில் சிறந்த தானம் எது?''
" நம்ம ஸ்கூல் விளையாட்டு மை தானம் சார்!...''

- துடுப்பதி வெங்கண்ணா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT