விவாகரத்தினால் ஏற்படும் உடல், மன ஆரோக்கிய விளைவுகள் மோசமானவை: ஆய்வில் தகவல்
திருமண விவாகரத்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
திருமண விவாகரத்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மக்கள்தொகையின் பாதிப்பைவிட சமீபத்திய விவாகரத்துகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த பின்னணி விளைவுகள் மோசமானவை என்று ஆய்வு கூறுகிறது.
ஃபிரன்டியர்ஸ் இன் சைக்காலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு விவாகரத்து செய்ய முற்படுவோர் அதனால் ஏற்படும் மன மற்றும் உடல் ஆரோக்கிய விளைவுகளைப் புரிந்துகொள்ளவும், விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்கள் அதிலிருந்து பின்வாங்கவும், எதிர்கால விளைவுகளைத் தடுக்கவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விவாகரத்து என்பது ஒரு நீண்ட செயல்முறையாகும். பல நாடுகளில் தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க, முன் பிரிவினை காலம் அவசியம். ஏனெனில் உளவியல் ரீதியாக அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்த காலம் உதவும். இருப்பினும் சமீபத்தில் பல்வேறு நாடுகளில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.
டென்மார்க்கில் 'உடனடி' விவாகரத்து என்று அழைக்கப்படும் விவாகரத்து பெற்றவர்கள் குறித்து ஆய்வு செய்ததில் அவர்கள் 5 நாள்களில் விவாகரத்து பெற்றனர்.
சமீபத்தில் விவாகரத்து பெற்ற டென்மார்க்கைச் சேர்ந்த 1,856 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில், சமீபத்திய விவாகரத்து உடல், மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும், சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் இந்த ஆய்வின் மூலமாக வெளிவந்துள்ளன.
ஆண்களிடையே அதிகம் சம்பாதிப்பது மற்றும் இளமையாக இருப்பது சிறந்த உடல் ஆரோக்கியத்தையும், குழந்தைகளைப் பெறுவது, ஒரு புதிய நபரை துணையாக ஏற்றுக்கொள்வது, முந்தையவருடன் விவாகரத்து பெறுவது மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக உள்ளது.
பெண்களுக்கு அதிக பணம் சம்பாதிப்பது, வாழ்வில் ஒரு புதிய நபரை பெறுவது ஆகியவை உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவையாகவும் அதேநேரத்தில் முந்தைய விவகாரத்தைப் பெறும்போது வேறொரு நபர் உடன் இருப்பது சிறந்த மன ஆரோக்கியத்தைத் தருவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இருப்பினும், விவாகரத்து செய்தவர்களுக்கு இடையே இருக்கும் மோதல்தா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, விவாகரத்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தைவிட மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்துள்ளது.
விவாகரத்து செய்பவர்களுக்கு பாதகமான மன மற்றும் உடல் ஆரோக்கிய விளைவுகளை கணிசமாகக் குறைக்க உதவும் இந்த சமீபத்திய ஆய்வின் முடிவுகள் எதிர்காலத்தில் இதுபோன்ற அணுகுமுறைகளை செம்மைப்படுத்த உதவும் என டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெர்ட் ஹால்ட் கூறுகிறார்.