செய்திகள்

சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்கும் 'மெட் காலா' நிகழ்ச்சி ஒத்திவைப்பு

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளும் 'மெட் காலா 2020' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 3 ஆகவும் உள்ளது.

இதன் காரணமாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மக்கள் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படுதல், பொது நிகழ்ச்சிகள் ரத்து என கரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதேபோன்று கரோனா தீவிரமடைந்து வரும் நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கரோனா அச்சறுத்தல் காரணமாக நியூயார்க்கில் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளும் 'மெட் காலா 2020' (Met Gala 2020) நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நடப்பு ஆண்டில் கரோனா அச்சறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியா சார்பில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் கலந்துகொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மெட் காலா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தில் மே மாதம் 15 வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் மெட் காலா நிகழ்ச்சியும் அடங்கும்' என கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT