சருமத்தின் அழகைக் கெடுக்கும் மருக்களைப் போக்க...
அழகு நிலையங்களில் மருக்களை நீக்குவதற்கு செயற்கை வழிமுறைகள் பல இருப்பினும், இயற்கை முறையில் நீக்குவதற்கான வழிகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சருமத்தின் உடலில் ஆங்காங்கே சில பகுதிகளில் மச்சம் போன்று காணப்படும் மருக்களால் பாதிப்பு பெரிதாக இல்லையென்றாலும் முக அழகை/ சரும அழகை கெடுக்கும் விதத்தில் இருக்கும்.
மருக்கள் பொதுவாக முகம், கழுத்துப் பகுதி, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு, இடுப்புப் பகுதிகளில் வரும்.
அழகு நிலையங்களில், கிளினிக்குகளில் இதனை நீக்குவதற்கு செயற்கை வழிமுறைகள் பல இருப்பினும், இயற்கை முறையில் நீக்குவதற்கான வழிகளை முதலில் பின்பற்றலாம்.
► தினமும் சிறிது இஞ்சிச்சாறை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வர மருக்கள் பின்னாளில் உதிர்ந்துவிடும்.
► உருளைக்கிழங்கின் ஒரு துண்டை எடுத்து மசித்து அவ்விடத்தில் தடவி வரலாம்.
► நாளொன்றுக்கு இருமுறை விளக்கெண்ணையை மருக்கள் மேல் தடவி வர விரைவில் தானாகவே உதிர்ந்துவிடும்.
► டீ ட்ரீ ஆயில் அல்லது வினிகரை பயன்படுத்தி மருக்களை நீக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன் இதனை மருக்கள் மீது தடவிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
► அன்னாசி இது மருக்களைப் போக்க உதவும் ஒரு சிறந்த இயற்கைப் பொருள். அன்னாசிப்பழச்சாறினை மருக்கள் மீது தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
► வெங்காயச் சாற்றினை மருக்கள் மீது தேய்த்தாலும் விரைவில் மருக்கள் மறையும்.
► வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்க்கலாம்.
► எலுமிச்சை சாற்றில் சில துளிகள் எண்ணெய் விட்டு மருக்கள் மீது விட்டு சிறிதுநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இம்முறையில் பூண்டுச்சாறினையும் பயன்படுத்தலாம்.