முகப்பு
செய்திகள்

'இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் பணியின்போது அதிக எரிச்சலடைகின்றனர்'

இந்தியாவில் வேலை செய்வோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பணியின்போது அதிக எரிச்சலை எதிர்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் வேலை செய்வோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பணியின்போது அதிக எரிச்சலை எதிர்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தொழிலாளர்கள், தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பிரித்து கையாளாத காரணத்தினாலும், கரோனா பாதிப்பு, பொதுமுடக்கம் காரணமாகவும், எரிச்சலடைவது அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்பட 8 நாடுகளில் 6,000க்கும் மேற்பட்ட தகவல்களையும், முன்வரிசைத் தொழிலாளர்களையும் (first line workers) கொண்டு கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசியாவில் பணியின்போது எரிச்சல் அடைவோர் விகிதம் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து கையாளதது வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

வணிக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் வேலை செய்யும் சூழ்நிலைகளை தொடர்ந்து ஆராய வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்களுக்கும் சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன பணி பிரிவின் தலைவர் சாமிக் ராய் தெரிவித்தார். 

19 சதவீத தொழிலாளர்கள், கரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தங்கள் நிறுவனத்தால் தேவையான தொழில்நுட்ப அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பதும், அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், 28 சதவீதம் பேர் நிர்வகிக்க முடியாத பணிச்சுமை மற்றும் அல்லது வேலை நேரம், 34 சதவீதம் பேர் வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →