கோப்புப்படம் 
செய்திகள்

8 மணி நேரத் தூக்கம் தேவையில்லை: ஆய்வில் புதிய தகவல்

ஒருவர் சராசரியாக எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்று நாம் அறிந்துள்ளோம். ஆனால் அது ஒரு நபரின் மரபணுவைப் பொறுத்து மாறுபடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

DIN

நியூயார்க்: ஒருவர் சராசரியாக எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்று நாம் அறிந்துள்ளோம். ஆனால் அது ஒரு நபரின் மரபணுவைப் பொறுத்து மாறுபடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், தூக்கத்தைப் பொறுத்தவரை, தூங்கும் நேரத்தை விட தூக்கத்தின் தரம் முக்கியமானது. குடும்ப இயற்கை குறுகிய தூக்கம் (FNSS) உள்ளவர்கள் இரவில் நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்க விரும்புகிறார்கள். அவர்கள் முழுமையாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளனர்.

இந்த திறமையான தூக்கத்தை செயல்படுத்துவதில் பங்கு வகிக்கும் ஐந்து மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் எட்டு மணிநேர தூக்கம் தேவை என்று ஒரு கோட்பாடு உள்ளது. ஆனால் மரபியல் அடிப்படையில் மக்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு வேறுபடுகிறது என்பதை தங்களது ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று நரம்பியல் நிபுணர் லூயிஸ் ப்டாசெக் கூறினார்.

மூளையின் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தூக்கப் பிரச்சினைகள் காரணம் என்று லூயிஸ் ப்டாசெக் கூறினார்.

நாம் தூங்குவதற்கும், விழிப்பதற்கும் நம்முடைய மூளையின் பல பாகங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். மூளையின் இந்த பாகங்கள் சேதமடையும் போது, தூங்குவது அல்லது தரமான தூக்கத்தை கடினமாக்குகிறது. 

தூக்கமின்மையை தடுக்க உதவும் மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தரமான தூக்கத்தை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT