செய்திகள்

இரவு உணவைத் தவிர்ப்பது சரியா?

மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதும் உயிர் வாழ இன்றியமையாததுமானது உணவு. அனைத்து தேடல்களுக்கும் உழைப்புக்கும் அடிப்படையானது உணவுதான். 

IANS


மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதும் உயிர் வாழ இன்றியமையாததுமானது உணவு. அனைத்து தேடல்களுக்கும் உழைப்புக்கும் அடிப்படையானது உணவுதான். உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காகவே உழைக்கிறோம் என்றால் மாற்றுக்கருத்து இல்லை. 

அதேவேளையில், உணவை வீணாக்குபவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்; ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் இருப்பவர்களும் இங்கிருக்கிறார்கள்.

நவீனத்திற்கு ஏற்ப உணவு முறைகளும் மாறி வருகின்றன. இதனால் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

பொதுவாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது; இல்லையெனில் உடல்நலக்குறைவு ஏற்படும் என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். அதுபோலவே, இரவு உணவும் முக்கியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சித்தாந்த் பார்கவா இதுகுறித்து விளக்குகிறார். 

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் அதிக இடைவெளி என்பதால் இரண்டுமே அவசியம். இரவு தூக்கத்தைத் தொடர்ந்து காலையில்
சுறுசுறுப்பாக இயங்கவும் உடல் இயங்கத் தேவையான ஊட்டச்சத்துக்கும் அன்றைய முதல் உணவான காலை உணவு மிக முக்கியமானது. அந்தவகையில், காலை உணவானது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நமது உடல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெறவும் வழிவகுக்குகிறது. 

காலையில் நன்றாகவும் மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட சற்று குறைவாகவும் உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். எனவே மதிய உணவும் அவசியமே. ஏனெனில் நமது மூளை பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். உடலும் மூளையும் திறமையாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக மதிய உணவு இருக்கிறது. 

பகல் என்பதால் அதிக உணவு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றில்லை. உங்கள் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு இடைவெளிவிட்டு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

பெரும்பாலானோர் மூன்று வேளை உணவுக்குப் பதிலாக பிரித்து 5 வேளை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நல்லது. அளவாக சாப்பிட்டால் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு எடுத்துக்கொள்ளலாம். 

அடுத்ததாக இரவு உணவு. இரவில் உணவு செரிமானம் பிரச்னை ஏற்படும் என்பதாலும் ஓய்வு நேரம் என்பதாலும் பலர் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். அது முற்றிலும் தவறு. முதல் நாள் பிற்பகலுக்கும் அடுத்த நாள் காலைக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது? பகலில் நன்றாக சாப்பிட்டுவிட்டோம் என்பதற்காக இரவு உணவைத் தவிர்க்கக்கூடாது. மாறாக, அளவாக எடுத்துக்கொள்ளலாம். எளிதாக செரிமானம் அடையக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். அசைவ மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கலாம். குறைந்தது பழங்கள், காய்கறிகள், பால் சாப்பிடலாம். ஆனால் தூங்குவதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்னதாக முடிந்தவரை 8 மணிக்குள்ளாக இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும். 

பகலில் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், மாலைக்குள் நாம் உட்கொள்ளும் அனைத்து கலோரிகளையும் எரித்துவிடுவோம். இரவில் பசி அதிகரித்தால் தூக்கம் வராது; மேலும் சாப்பிடாமல் தூங்குவது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். இரவு உணவு சாப்பிடாமல் இருந்தாலும் அதிகமாக சாப்பிடுதலும் பயனளிக்காது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT