செய்திகள்

எந்த வகையான இசை நமக்கு தூங்க உதவுகிறது?

DIN

உறங்கும் நேரத்தில் இசையைக் கேட்பது, நமது இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தைக் ஒழுங்குபடுத்தி, மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, நம்து தூக்கத்தை எளிதாக்குகிறது.

ஒரு நல்ல இரவு தூக்கம் முழுமையான நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நமது உடல், மன ஆரோக்கியத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. இன்னும், உலகளவில் சுமார் 62 சதவீத பெரியவர்கள் இரவில் நன்றாக தூங்குவதில்லை என்று ஆய்வு கூறுகிறது.

அமைதியான இசையைக் கேட்பது எப்படி தூக்கத்தை மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி குழு நிரூபித்து வருகிறது. உண்மையில், இசை பாராசிம்பேடிக் நரம்பு மண்டலம் உள்பட முழு மூளையையும் தூண்டுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. இது உடலை ஓய்வெடுக்கவும் மற்றும் தூங்கவும் செய்கிறது.

557 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய பத்து வெவ்வேறு ஆராய்ச்சி ஆய்வுகளின் முடிவு சொல்வது என்னவென்றால், நாள்பட்ட தூக்கப் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த தூக்கத்தைப் பெற உதவுவதில் இசை பயனுள்ளதாக இருக்கிறது.

பிடித்த பாடல்களை உள்ளடக்கிய பிளேலிஸ்ட்டை உருவாக்கி கேட்கலாம். டெம்போ என்பது இசை இசைக்கப்படும் வேகத்தைக் குறிக்கிறது. மனித இதயம் பொதுவாக 60 முதல் 100 பிபிஎம் வரை துடிக்கும் என்பதால், 60-80 பிபிஎம் வரையிலான டெம்போவுடன் இசையைக் கேட்பது சிறந்தது என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது.

உணர்ச்சிகரமான எதிர்வினைகளை ஏற்படுத்தும் இசையை தவிர்க்கவும் வேண்டும். பல சுகாதார அமைப்புகளும் தூங்குவதற்கு முன் அமைதியான இசையைக் கேட்க பரிந்துரை செய்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT