செய்திகள்

இந்த 6 அழகுப் பொருள்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளலாம்!

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் குறிப்பிட்ட சில அழகுப் பொருள்களை பகிர்ந்துகொள்ளலாம். 

DIN

உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய 6 அழகுப் பொருள்கள்!

வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழகுப் பொருள்கள் வாங்க வேண்டிய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் கீழ்குறிப்பிட்ட இந்த பொருள்களை எல்லாம் பகிர்ந்துகொள்ளலாம். 

இந்த பொருள்களை இருவரும் பயன்படுத்தினாலும் பயன்கள் இருவருக்கும் ஒரேமாதிரியாகவே இருக்கும். எந்தவித எதிர்மறையான விளைவுகளும் ஏற்படாது. 

என்னென்ன பொருள்கள்... பார்க்கலாம்! 

ஷாம்பூ, கண்டிஷனர் 

ஷாம்பூ, கண்டிஷனர் இரண்டும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. எனவே, வீட்டில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பொதுவான இருவருக்கும் ஒத்துவரக்கூடிய ஷாம்பூ, கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். 

ஹேர் மாஸ்க் 

முடி உதிர்வதைக் குறைக்கவும் முடி பளபளப்பாக கருமையாக இருக்கவும் ஹேர் மாஸ்க் உதவுகிறது. அந்தவகையில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஹேர் மாஸ்க்கை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஷேவிங் க்ரீம்

உடலில் தேவையற்ற முடிகளை அகற்ற பயன்படும் ஷேவிங் க்ரீமையும் உங்களின் தோல் தன்மைக்கு ஏற்ப இருவரும் பகிர்ந்துகொள்ளலாம். 

ஜெல் 

தலைக்குப் பயன்படுத்தக்கூடிய ஜெல் இரு பாலினத்தவருக்கும் பொதுவானதுதான். இரு வேறு தயாரிப்புகளை வாங்கினாலும் இருவரும் மாறி மாறி பயன்படுத்தலாம். 

ஹேர் டூல்ஸ் 

ஹேர் ட்ரையர், ஸ்ட்ரைட்னர் என ஹேர் ஸ்டைலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளலாம். 

பெர்புயூம்/ வாசனைத் திரவியங்கள் 

ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக வாசனைத் திரவியங்கள் இருந்தாலும் அவசரத் தேவைக்கு மாற்றி பயன்படுத்தலாம். இரு பாலினத்தவருக்கும் பொதுவான வாசனைத் திரவியங்களும் இருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT