செய்திகள்

உடல் எடையைக் குறைக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்..!

உடல் எடையைக் குறைக்கவும் கோடைக்காலம் சிறந்தது. ஏனெனில் அவை ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதுடன் உடல் எடையைக் குறைக்கின்றன.

DIN

கோடைக் காலம் வந்துவிட்டது... அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் வெப்பம் அதிகமாகும். இந்த நேரத்தில் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியம். உடல் சூடாகாமல் இருக்க குளிர்ச்சியான பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதுபோல, உடல் எடையைக் குறைக்கவும் கோடைக்காலம் சிறந்தது. ஏனெனில் அவை ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதுடன் உடல் எடையைக் குறைக்கின்றன. குறிப்பாக செர்ரி பழங்களை உட்கொள்வது நல்ல ஆற்றலைத் தருவதுடன் உடலில் கொழுப்பைக் கரைக்கின்றன. 

உடல் எடையைக் குறைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில பழங்கள்: 

செர்ரி பழம்

செர்ரி பழம் சுவையுடன் ஜூஸியாக இருக்கும். இனிப்பு, புளிப்பு கொண்ட செர்ரி உங்கள் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது ஆற்றலை அதிகரிக்க உதவுவதோடு, மனச்சோர்வை தடுக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ரத்தத்தில் யூரிக் அமிலத்தைக் குறைக்கவும் பயன்படும். 

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. உடலில் கெட்ட கொழுப்பைக் குறைப்பதோடு உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரியை ஸ்மூத்தி அல்லது ஓட்ஸ் பான்கேக் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். இதில், அதிக அளவு வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளன. குறைந்த அளவு கலோரிகளே இருப்பதால் உடல் எடைக் குறைப்பில் உதவும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றன, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன.

ஆரஞ்சு

உடலில் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. ரத்த சோகைக்கு எதிராக இரும்பை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

பப்பாளி

மலிவாகக் கிடைக்கும் என்பதால் தினமும் கூட குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். செரிமானப் பிரச்னையை சரிசெய்யும். உடல் எடையைக் குறைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT