செய்திகள்

கோடைக்காலத்தில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 காய்கறிகள்!

கோடைக்காலத்தை எப்படிக் கடக்கப்போகிறோம் என்று யோசிப்பதை விட, கோடையில் நிலவும் அதிகப்படியான வெப்பத்தை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்து அதற்கேற்ப உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். 

DIN


கோடைக்காலத்தை எப்படிக் கடக்கப்போகிறோம் என்று யோசிப்பதை விட, கோடையில் நிலவும் அதிகப்படியான வெப்பத்தை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்து அதற்கேற்ப உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். 

பொதுவாக கோடைக்காலமான மார்ச் முதல் ஜூன் வரையிலான காலங்களில் வெப்பம் போதும் போதும் என்றளவுக்கு சுட்டெரிக்கும். அதிலும் முன் கத்தரி, பின் கத்தரி என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். 

வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் ஒருவித சோர்வை ஏற்படுத்தும். கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு மட்டுமின்றி உப்பு சத்துக் குறைபாடும் ஏற்படுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்? என்று பார்ப்போம். 

பொதுவாக இந்த சமயத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொண்டால், நீர்ச்சத்து இழப்பு இல்லாமல் நம் உடலை பாதுகாக்கக்கொள்ள முடியும். 

கோடையில் எடுத்துக்கொள்ளவேண்டிய காய்கறிகள்..

வெள்ளரிக்காய்

கொளுத்தும் கோடை வெயிலுக்கு சிறப்பான உணவு என்றால் அது வெள்ளரி. இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடல் வறட்சியைப் போக்கும். மேலும் உடலில் ஏற்படும் அதீத சூட்டைத் தணிக்கும். தினமும் வெள்ளரியை எடுத்துக்கொள்வதினால் சருமத்தைப் பளபளப்பாக்கும். வெள்ளரிக்காயை சலாட் மற்றும் சான்விச் என எப்படிவேண்டுமானும் எடுத்துக்கொள்ளலாம். இதில் 96 சதவீத தண்ணீர் நிறைந்துள்ளதால் விட்டமின் கே மற்றும் விட்டமின் சி சத்துக்கள் உள்ளன. 

சுரைக்காய் 

கோடைக்காலத்தில் அதிகம் விளையக்கூடிய காய் சுரைக்காய். இது உடலுக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுக்கக் கூடியது. இந்த காயிலும் சுமார் 96 சதவீத நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக இருக்கவும் இது உதவும். கண் பார்வையைக் கூர்மையாக்குவதோடு, உடல் வறட்சியை நீக்குகிறது. சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்த சுரைக்காயில் கால்சியல் சத்து அதிகமாக உள்ளது. இது செரிமான பிரச்னையை சரிசெய்யவும், அதிக கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. 

பூசணிக்காய்

மஞ்சள், வெள்ளை என்று பூசணியில் இரு வகை உள்ளது. பொதுவாகவே பூசணியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். கண் பார்வை பலப்படும். வெள்ளை பூசணியில் அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைக்காலத்தில் இந்த காயை அதிகளவில் சேர்த்துவந்தால் உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம்.

முள்ளங்கி

முள்ளங்கியைப் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் முள்ளங்கியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்புச் சக்தியும் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, செரிமான கோளாறுகள், கல்லீரல் சுத்திகரிக்கவும், சிறுநீரகப் பிரச்னை என பல்வேறு பிரச்னைக்கு நல்ல அருமருந்து.  உடல் எடை குறையும். 

தக்காளி 

தக்காளியில் 93 சதவீத தண்ணீர் மற்றும் லைகோபைன் என்னும் உடலை சுத்தம் செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதனை வெயில் காலத்தில் அதிகம் சாப்பிடுவதால் முகம் பொலிவோடு இருப்பதோடு, வறட்சியின்றியும் இருக்கும். குறிப்பாக இதை பச்சையாக சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும். தக்காளியை கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

குடைமிளகாய் 

குடைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், கோடைக்காலத்தில் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் இதர சத்துக்களான லூடின், பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்குகளால் ஜொலித்த நொய்யல் ஆறு! கழுகுப் பார்வை காட்சிகள்!

கனமழை எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

சபரிமலையில் கனமழை

SCROLL FOR NEXT