செய்திகள்

மறதியிலிருந்து தப்புவது எப்படி? - ஆய்வில் புதிய தகவல்!

உடல் ஆரோக்கியத்தைக் கையாளுவதைப் பொருத்தே மறதி ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

DIN

மறதி வயதானவர்களுக்கு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள்கூட மறதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மறதி வராமல் தடுப்பது எப்படி? என பல ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தைக் கையாளுவதைப் பொருத்தே மறதி ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் உள்ள தியான்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இதயம், நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் மறதிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இதய செயல்பாடுகள் நன்றாக உள்ளவர்கள் அறிவாற்றலில் சிறந்து விளங்குகிறார்கள், அவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் வருவதற்கான அபாயம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய சுவாச உடற்பயிற்சி ( கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னெஸ்)

உடல் செயல்பாடுகளின்போது தசைகளுக்கு எந்தளவுக்கு ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்பதே இதய சுவாச உடற்பயிற்சி. இது சிறப்பாக இருப்பவர்களுக்கு மற்றும் இதயம், நுரையீரல் செயல்பாடுகள் சரியாக இருபவர்களுக்கு மறதி ஏற்படும் வாய்ப்பு குறைவு. எனினும் 70 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னெஸ் 20% குறைகிறது.

ஆய்வின் முடிவுகள்

இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது முதல் 70 வயதுடைய 61,000 பேரிடம் 12 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு பைக்கில் சுமார் 6 நிமிட உடற்பயிற்சி சோதனை செய்யப்பட்டது. அதுபோல அவர்களின் நினைவுத்திறன், அறிவாற்றலும் சோதிக்கப்பட்டது.

இதில் கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் அதிகம் உள்ளவர்கள் அறிவாற்றல் சோதனைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டது.

ஆய்வு மேற்கொண்ட 12 ஆண்டுகளில் 533 பேருக்கு மறதி நோய் ஏற்பட்டது. கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் உள்ளவர்களுக்கு மறதியை உருவாக்கும் அபாயம் 40% குறைவு. இது மறதி ஏற்படுவதை 1.5 ஆண்டுகள் தாமதப்படுத்தலாம்.

மறதி நோய்க்கான மரபணு ஆபத்துக் காரணிகள் இருந்தாலும் கூட, இதயம், நுரையீரல் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளவர்களுக்கு மறதி தள்ளிப்போகலாம்.

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மறதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT