The father who threw the body of the dead child into the canal
The father who threw the body of the dead child into the canal 
செய்திகள்

பிறவிக் குறைபாடு இல்லாமல் தடுக்க முடியுமா?

DIN

சிறப்பான வாழ்முறைகளால், பிறவிக் குறைபாடுகள் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்றே மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஒரு புதிய உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருவது என்பது ஒரு அழகான உணர்வு. அதனை அனைத்துப் பெண்களும் கொண்டாடச் செய்வார்கள். அது மட்டுமல்ல.. இத்தனை காலம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து கையில் எடுக்கும் போது அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும்போதுதான் ஒரு பெண்ணின் ஆனந்தம் பூர்த்தியடைகிறது.

சரி.. பிறக்கும் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் லட்சணமாகப் பிறக்க வேண்டும் என்றால் இந்த சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டுமாம்.

இரும்புச் சத்து மாத்திரை

கர்ப்பிணிகள், தங்களது மகப்பேறு காலத்தில் இரும்புச் சத்து எனப்படும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கட்டாயம் சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால், கருவுறத் தயாராகும் பெண்கள் ஒரு மாதத்துக்கு முன்பே 400 எம்சிஜி அளவுள்ள போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது கருவுறும்போதே ஒரு பெண் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாதாம்.

பிறகு குழந்தை பிறந்து அதற்கு பாலூட்டும் வரையிலும் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இந்த மாத்திரையை தொடர வேண்டும்.

சீரான எடை

கர்ப்பிணிகள் அதிக எடையுடன் இருக்கக் கூடாது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே, எடையை சீரான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

போதைப் பொருள்கள் கூடவே கூடாது

அது எந்த விதமான போதைப் பழக்கமாக இருந்தாலும், கட்டாயம் கருவுற வேண்டும் என்று தயாராகி ஒரு மாதத்துக்கு முன்பே கைவிட்டுவிட வேண்டும்.

நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்க

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும்.

அடுத்து.. விரைவாகவே மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். கருவுற்று இத்தனை நாள்களுக்குப் பிறகுச் செல்லலாம் என்று மற்றவர்கள் அளிக்கும் அறிவுரைகளை கேட்காமல், முன்கூட்டியே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷியா குற்றச்சாட்டு

துணிந்த, பயமறியாத, தன்முனைப்புள்ள இளவரசி!

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT