WALKING PAD012450.JPG

 
Center-Center-Delhi
செய்திகள்

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

நாள்தோறும் 10,000 நடை நடக்க வேண்டும் என்பது சிலருக்கு சாதனையானாலும் பலருக்கும் சோதனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

மாறிவிட்ட வாழ்முறையால் ஏற்படும் தொப்பை அல்லது தொல்லைகளிலிருந்து விடுபட முயல்வோர், நாள்தோறும் ஆயிரம் அளவில் நடைகளை மேற்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களிலும் பரப்புகிறார்கள்.

பலரும், இதனை தங்களது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைத்து நடக்க முன்வராதவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள். அது ஒருபுறமிருக்க நாள்தோறும் 10 ஆயிரம் நடைகள் நடந்தால்தான் ஆரோக்கியமான உடல் சாத்தியம் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக்கப்பட்டுள்ளது.

ஃபிட்நஸ் டிராக்கர்கள் அல்லது மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த் உடல்நல வல்லுநர்கள் கொடுக்கும் ஆலோசனைகளின்பேரில் பலரும் இந்த மேஜிக் எண்ணைத் தொட்டுவிட துடிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஒரு மனநலன் சார்ந்த விஷயமாகவும் மாறிவிட்டது. ஒருசிலரோ, இந்த 10,000 என்ற எண் எங்களை அச்சுறுத்துகிறது. நாள்தோறும் நடந்து முயன்று இந்த எண்ணை அடைய முடியாது என்ற சோர்வை ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.

மிகவும் உடல் பருமனோடு இருக்கும் சிலர், நாள்தோறும் முயன்று பார்த்துவிட்டு அதனை எட்ட முடியாமல் போகும்போது மனம்தளர்ந்து விடுகிறார்கள். பொதுவாக ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு ஓடும்போது அது இலக்கை அடைய உத்வேகத்தை அளிக்கலாம். அதனை நோக்கி செல்ல வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதே இந்த இலக்குகளுக்கு அடிப்படைக் காரணம். ஆனால் இந்த எண் எதிர்மறையாக செயல்படுகிறது என்கிறார்கள் எட்ட முடியாதவர்கள் அல்ல, இத்தனை நடை நடக்க முடியாதவர்கள்.

மிகச் சிறந்த உடல்நலத்தக்கு நாள்தோறும் 10000 நடைகள் என்பது அனைவருக்கும் நிரந்தரமான ஒரு இலக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடல்நலன் என்பது பல்வேறு காரணிகளால் புரிந்துகொள்வதிலும் ஒரே விதிக்கு உள்படுத்துவதிலும் வேறுபடுகிறது. அதாவது ஒருவர் எடுக்கும் உணவு, உறங்கும் நேரம், செய்யும் வேலை, மனநிலை உள்ளிட்ட அனைத்தையுமே இதற்கு கணக்கில் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும். ஆனால் பொதுவாக அனைவருக்கும் ஒரே கணக்கு என்றால், நிச்சயம் அது தப்பான கணக்காகவே முடிந்துவிடும் என்றும் எச்சரிக்கை எழுந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக அனைவரும் தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண் எங்கிருந்து தொடங்கியது, யார் இந்த எண்ணை நிர்ணயித்தார்கள்? யாருக்காக இது நிர்ணயிக்கப்பட்டது? கடைசியாக ஒரு கேள்வி.. இந்த ஒட்டுமொத்தமாக வெறும் நம்பிக்கைதானா?

உண்மை நிலவரம் என்ன?

ஜப்பானில் 1960ஆம் ஆண்டு ஒருவர் நாள்தோறும் 10,000 நடைகள் நடக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் மூலம், பீடோமீட்டர் என்ற கருவி அதிகம் விற்பனையானது. இதற்கு நல்ல சந்தைப்படுத்துதலாக இந்த 10,000 நடை உதவியது.

இந்த எண் கிட்டத்தட்ட எப்படி வந்தது என்றால், அடைவது சற்றுக் கடினமாகவும் இந்த எண்ணைப் பார்க்க கவனத்தை ஈர்ப்பதகாவும் இருந்ததால்தானாம்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

வெறுமனே எத்தனை நடை நடக்கிறோம் என்பதை கணக்கிடுவதில் தவறில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதன்படி நடக்கலாம்.

உண்மையான பயன் என்பது பல்வேறு காரணிகளால்தான் வருகிறது.

உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மற்றும் உடல்நலனுக்குத் தேவையானது என்பது வேறுபடுகிறது.

உடல் நன்கு இயக்க நிலையில் இருப்பது கட்டாயம்தான்.

ஆனால், உடலை வறுத்தி அதிக நடைகள் நடப்பது எதிர்மறை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

நடப்பதை மெல்ல அதிகரிப்பது எப்படி?

கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்குங்கள்.

அதிகம் நடப்பதை விடவும் படிகள் ஏறுவது சிறந்தது.

அருகிலிருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்.

நடக்கும்போது இசையை ரசிக்கலாம். கதை கேட்கலாம்.

நடைப்பயிற்சிக்கு இடையே இடைவெளி விடலாம்.

ஒரே நடைப்பயிற்சியில் முழு எண்ணிக்கையையும் முடிக்க நினைக்க வேண்டாம்.

உண்மையிலேயே எத்தனை நடை தான் நடக்க வேண்டும்?

ஒருநாளைக்கு 4000 நடைகளுக்கும் கீழ் குறைய வேண்டாம்.

உங்கள் வயது, உடல்நிலை, கட்டுக்கோப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு உங்கள் நடை இலக்கை தீர்மானிக்கலாம்.

அடிப்படையாக நாம் அங்கும் இங்கும் செல்வதை நடைப்பயிற்சியாக கணக்கில் எடுக்க முடியாது.

உங்களால் நடக்க முடிந்த அளவை நிர்ணயித்துக்கொண்டு அதனை விட சில ஆயிரம் அடிகள் இலக்காகக் கொண்டு படிப்படியாக அதிகரிக்கலாம். எடுத்ததும் பெரிய எண் வேண்டாம்.

எப்போது நடக்கலாம்?

பொதுவாகவே அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் பொருந்தாது. அதுபோலவே, இந்தக் கேள்வியும்.

உங்களின் அன்றாட வேலை நேரத்தைப் பொருத்தை அதை அமைத்துக்கொள்ளலாம்.

உண்மையிலேயே உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சிக்கு நேரம் என்பது முக்கியமல்ல.

உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் நடைப்பயிற்சி. அதைமட்டும் புரிந்துகொண்டால் இலக்குகள் எதுவும் உங்களை பாதிக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT