கோப்புப்படம் ENS
செய்திகள்

குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தாயின் மன அழுத்தம் தீர்மானிக்குமா?

தாயின் மன அழுத்தத்திற்கும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு...

இணையதளச் செய்திப் பிரிவு

தாயின் மன அழுத்தத்திற்கும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி நியூயார்க்கில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்ப்ப காலம், குழந்தை பிறப்பு ஆகியவற்றின்போது பெண்கள் மன அழுத்தத்துடன் இருக்கக்கூடாது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நன்றாக சாப்பிடுவது, போதுமான உறக்கம் எல்லாம் வேண்டும் என்று மருத்துவர்களே தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள்.

ஏனெனில் தாயின் மனநிலை, கரு(குழந்தை) வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மருத்துவர்களும் இதை கூறுகிறார்கள். அறிவியல்ரீதியாகவும் சில ஆய்வுகள் இதனைக் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் தாயின் மன அழுத்தம் குழந்தையின் பாலினத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவர்கள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் அழுத்தங்களின் விளைவுகளைக் கூறுகிறது. உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள், கரு வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறது. குறிப்பாக தாயின் மன அழுத்தத்தைப் பொருத்து குழந்தையின் பாலினம் நிர்ணயிக்கப்படுவதாகவும் எடுத்துரைக்கிறது.

இந்த ஆய்வு தேசிய அறிவியல் அகாடமியின் பிஎன்ஏஎஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்தரிக்கும்போது மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பெண் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாம். அதுவே குறைந்த மன அழுத்தம் என்றால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது இந்த ஆய்வு.

18 முதல் 45 வயது வரையிலான 187 கர்ப்பிணிகளின் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் கர்ப்பிணிகள், ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர்களுக்கு பெண் குழந்தைகளுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறது.

நியூயார்க் நகரில் 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஆண் குழந்தைகள் பிறப்பு குறைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்கள் கருத்தரிக்கும்போது அதிக மன அழுத்தத்தில் இருந்தால் ஆண் கரு உருவாகக் காரணமான விந்தணுக்கள் கருவுடன் சேரும்போது கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆனால் பெண் குழந்தை உருவாகவுள்ள கரு பாதிக்கப்படுவது குறைவு என்றும் காரணமாக கூறப்படுகிறது.

பெண் கரு, கார்டிசோல்போன்ற மன அழுத்த ஹார்மோன்களால் குறைவாகவே பாதிக்கப்படக்கூடும் என்கிறது இந்த ஆய்வு.

முடிவு என்ன?

ஆனால், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது விந்தணுக்கள்தான் என்பது அறிவியலில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆய்வு என்பது ஒரு ஆய்வுதான், முடிவு அல்ல என்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதேநேரத்தில் பெண்ணின் மன அழுத்தம் கருப்பையில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ள்ளது.

கர்ப்பிணிகளின் மன அழுத்தத்தினால் குறைப் பிரசவம், குழந்தையின் எடை குறைவாக இருப்பது, நரம்பியல் குறைபாடுகள், ஏடிஹெச்டி போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மன அழுத்தம், குழந்தையின் பாலினத்தை முடிவு செய்யுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

study finds stress during pregnancy can impact baby's sex

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னத்தில் கன்னம்...சனம் ஜோஷி

கறுப்பு உளுந்து அடை

‘முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸை’ பிகார் நிராகரித்துவிட்டது: பிரதமர் மோடி

தில்லி செங்கோட்டை மீண்டும் திறப்பு! நாளை முதல் பார்வையாளர்கள் அனுமதி!

தில்லி: இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற காதலன்

SCROLL FOR NEXT