தொழில்நுட்பம்

கூகுளை சீண்டும் சத்ய நாதெல்லா: என்ன காரணம்?

இணையதள செய்திப்பிரிவு

மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, செய்யறிவு தொழில்நுட்ப (ஏஐ) போட்டியில் கூகுள்தான் முதலிடத்தில் இருக்க வேண்டியது என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட், ஓபன்ஏஐ உடன் இணைவினால் இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ளபோதும் கூகுளிடம் தவிர்க்க முடியாத வளங்களும் திறன்களும் இருப்பதை சத்ய நாதெல்லா ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து, “கூகுள் கடுமையான போட்டி தரும் நிறுவனம். அவர்களிடம் திறனும் கணக்கீடும் உண்டு. தகவல்கள் முதல் சிலிகான் வரை, வடிவமைப்பு முதல் தயாரிப்பு மற்றும் பகிர்மானம் வரை அவர்களிடம் எல்லாமும் உண்டு” என பாட்காஸ்ட் ஒன்றில் பேசும்போது நாதெல்லா குறிப்பிட்டுள்ளார்.

நாதெல்லாவின் இந்த சீண்டல் கூகுளின் மீது ஏஐ போட்டியில் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது.

சமீபத்தில் கூகுளின் ஏஐ வெளியீடான ஜெமினை உருவாக்கும் படங்கள், வரலாற்று சரித்தன்மை இல்லாததால் பலரின் விமர்சனத்துக்கும் உள்ளானது. பாரபட்சமற்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுளுக்கு சமூக வலைதள பயனர்கள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT