கோப்புப்படம் 
உடல் நலம்

உடல் பருமன் கொண்டவர்களுக்கு... குறைந்த கலோரி உணவுகள்!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 

DIN

உடல் இயக்கமின்மை, உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். என்னதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. 

குறைந்த கலோரி கொண்ட உணவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதாவது உடல் இயக்கத்தில் இருந்தால் அதாவது உடற்பயிற்சி செய்யும்போது உடலில் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்டவை உடலில் கலோரிகளாக ஏற்றப்படுகிறது. 

கலோரி குறைவாகக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். இதற்காக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை என்று அர்த்தமில்லை. 

குறைந்த கலோரி உணவுகளும் அதில் உள்ள கலோரிகளின்(100 கிராமுக்கு) அளவுகளும்(தோராயமாக)

► வெள்ளரிக்காய் - 16 கிராம் கலோரி 

► ப்ரோக்கோலி - 34 கிராம் 

► கேரட் ஒரு கப் - 50 கிராம் 

► செலரி - 16 கிராம்  

► ஆப்பிள் - 57 கிராம் (125 கிராமுக்கு) 

► பீட்ரூட் - 43 கிராம் 

► தக்காளி ஒரு கப் - 22 கிராம் 

► முட்டைகோஸ் - 22 கிராம்  

► காலிபிளவர் - 25 கிராம்

► முள்ளங்கி - 18 கிராம்

► சுரைக்காய் - 19 கிராம் 

► காளான் - 15 கிராம்

► கேப்ஸிகம் - 46 கிராம் 

► கீரை ஒரு கப் - 7 கிராம் 

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கீழ்க்குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

♦ கொழுப்பு மிகுந்த இறைச்சி

♦ வெண்ணெய், நெய்

♦ முட்டையின் மஞ்சள் கரு (அளவாக சாப்பிடலாம்)

♦ பால், வெள்ளைச் சக்கரை

♦ குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்

♦ குக்கீஸ், கேக், சிப்ஸ் வகைகள்

♦ கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கு 

♦ பாதாம், முந்திரி பருப்புகள் 

♦ பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித உணவுகள் 

♦ எண்ணெய்யில் பொரித்த உணவுகள் 

♦ மாம்பழம், வாழைப்பழம், திராட்சை

♦ சாஸ் குறிப்பாக சோயா சாஸ் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

SCROLL FOR NEXT