உடல் நலம்

தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?

காய்கறிகளில் சுரைக்காய் மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். 

DIN

காய்கறிகளில் சுரைக்காய் மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். 

ஆனால், உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்க, சுரைக்காயை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

சுரைக்காயில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருக்கிறது. 95% நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. 

நீர்ச்சத்து அதிகமிருப்பதால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. 

மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வு. மேலும் குடலில் புண்கள் இருந்தால் சுரைக்காய் சாப்பிட்டு வர குணமாகும். உடல் சூட்டைக் குறைக்கும். 
 
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிடலாம். 

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு 3 முறையாவது சுரைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. குறிப்பாக வயிற்றுப்பகுதில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க அதாவது தொப்பையைக் குறைக்கும் ஒரு எளிய மருந்து சுரைக்காய். 
 
சுரைக்காய் சாப்பிடுவதால் வயதாகும் சரும செல்களை புத்துணர்வு அடைய வைக்கும். இதனால் சருமம் பொலிவு பெறும். இளமையைத் தக்கவைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாகம் தீர்க்கும் இளநீருடன்... ரோஸ் சர்தானா

ஒருநாள் தொடருக்கான அணியில் என்னுடைய பெயர் இருக்காதென முன்பே தெரியும்: ஜடேஜா

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு மதிப்பு அதிகம்! முதல்வர் ஸ்டாலின்

நிவின் பாலியின் சர்வம் மயா டீசர்!

SCROLL FOR NEXT