election 
உள்ளாட்சித் தேர்தல் 2019

திருச்சியில் போட்டியின்றித் தேர்வான 12 ஊராட்சித் தலைவர்கள்

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.

ஆர். முருகன்

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொப்பாவளி ஊராட்சி மன்றத் தலைவர் - ப. செல்வராணி, மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர்- பெ. ராமலிங்கம், கோமாகுடி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. ரவி ஆகிய 3  பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாகலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக கி. நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மணியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்- சி. அம்மாக்கண்ணு, கொடும்பப்பட்டி ஊராட்சித் தலைவர்- பி.எஸ். வேட்டை, உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. பொம்மநாயக்கர், அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர்- பா. துரைசாமி ஆகிய 4 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி மன்றத் தலைவராக என். கிருஷ்ணம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பி.என். சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக எஸ். பால்ராஜ்,சேதுராப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக டி. வசந்தா ஆகிய இருவர் தேர்வாகியுள்ளனர். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நம்புகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக ம. செல்வராஜ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!

லாரி மோதி கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி!

SCROLL FOR NEXT