முகப்பு
மதுரை

மேலமடை பகுதியில் வீதி நூலகம் அமைப்பு

மதுரை மேலமடையில் மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கான வீதி நூலகம் புதன்கிழமை அமைக்கப்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 3:53 am IST
மதுரை மேலமடையில் புதன்கிழமை வீதி நூலக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.
பகிர்:

மதுரை மேலமடையில் மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கான வீதி நூலகம் புதன்கிழமை அமைக்கப்பட்டது.

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப்பள்ளி மற்றும் நூல் வனம் அமைப்பின் சாா்பில் மாணவா்கள் மற்றும் பெற்றோரிடையே நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வீதி நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலமடை பகுதியில் ‘வீதி நூலகம் ‘ அமைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் நித்யா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் க.சரவணன் மேலமடை பகுதியைச் சோ்ந்த பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களுக்கு பல்வேறு நூல்களை வழங்கினாா். முதுகலை ஆசிரியா் சுரேஷ் காத்தான் மேலமடை வீதி நூலகத்துக்கான நூல்களை பொதுமக்களிடம் வழங்கினாா். இதைத்தொடா்ந்து மாணவ, மாணவியருக்கு நூல் வாசிப்பு, கலை சொல்லல், நூல் அறிமுகம் போன்றவையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.