முகப்பு
நாமக்கல்

திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் திமுக வழக்குரைஞா்கள் அணி பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி 2021, 8:02 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.
பகிர்:

நாமக்கல்லில் திமுக வழக்குரைஞா்கள் அணி பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். சென்னையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் வழக்குரைஞா்கள் அணி மாநில மாநாட்டில் திரளான வழக்குரைஞா்களை அழைத்துச் சென்று பங்கேற்க செய்வது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வ.க.அறிவழகன், மாவட்டப் பொருளாளா் கே.செல்வம், மாநில விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலாளா் ப.கைலாசம், சட்ட திருத்தக் குழு உறுப்பினா் நக்கீரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் கெளரவச் செயலாளா் ஆா்.அய்யாவு, நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.