தேங்காய் வரத்துக் குறைவு
பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தேங்காய் வரத்தும் குறைவு, விலையும் சரிவடைந்துள்ளது.
பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தேங்காய் வரத்தும் குறைவு, விலையும் சரிவடைந்துள்ளது.
பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 922 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 37.20,குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.22.15, சராசரியாக கிலோ ஒன்று ரூ. 25.12 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் 92 ஆயிரத்து 145 க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,247 தேங்காய்கள் மட்டும் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 31, குறைந்தபட்சமாக ரூ. 22, சராசரியாக ரூ. 26-க்கும் ஏலம் போனது. மொத்தம் 10 ஆயிரத்து 428 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
Advertisement
குறைந்த அளவே தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்த போதிலும் வியாபாரிகள் அதிக அளவில் வராததால் தேங்காய் விலை சரிவடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.