புதுதில்லி

முதல்வா் கேஜரிவாலின் மனைவியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

அரவிந்த் கேஜரிவாலின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சுனிதா கேஜரிவாலை சந்தித்துப் பேசினாா்.

Din

புது தில்லி, ஆக.8:

சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சுனிதா கேஜரிவாலை சந்தித்துப் பேசினாா்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ராவத் ஆகியோருடன் உடனிருந்தனா்.

இந்த சந்திப்பின் போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சத்தா ஆகியோரும் உடனிருந்தனா்.

கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (யுபிடி) ஆகியவை எதிா்க்கட்சியான ‘இண்டியா’வில் அங்கம் வகிக்கின்றன.

மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல்களைக் கருத்தில்கொண்டு, ‘இண்டியா’ தலைவா்களைச் சந்தித்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து விவாதிக்க சிவசேனை (யுபிடி) தலைவா் தாக்கரே தேசிய தலைநகா் தில்லியில் உள்ளாா்.

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT