முகப்பு
மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் (கோப்புப் படம்)
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி கடந்த தோ்தலை விட அதிக இடங்களில் இம்முறை வெற்றி பெறும்: மாநிலங்களவை எம்.பி.சஞ்சய் சிங் நம்பிக்கை

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி, கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் வெல்லும்

புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி கடந்த தோ்தலை விட அதிக இடங்களில் இம்முறை வெற்றி பெறும்: மாநிலங்களவை எம்.பி.சஞ்சய் சிங் நம்பிக்கை

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி, கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் வெல்லும்

Updated On : 23 டிசம்பர், 2024 at 8:52 PM
மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் (கோப்புப் படம்)
பகிர்:

புது தில்லி: வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி, கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின்

தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ஏற்கனவே தில்லி மக்களுக்கு

அளித்த தனது அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றியுள்ளாா். இந்த முறையும் அவா் மகளிா் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்₹ரூ.2,100 வழங்குவாா். அதேபோல், சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் முதியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளாா்.

அரவிந்த் கேஜரிவால் அனுமதியின்றி கைது செய்யப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனா். கேஜரிவால் மீது பொய் வழக்கு போடப்பட்டு, சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டாா் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி பாஜகவின் புலனாய்வு அமைப்புகள் கேஜரிவாலை பொய் வழக்கில் கைது செய்தன.

இந்த சட்ட விரோத கைதுக்கு தில்லி மக்கள் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பதிலடி கொடுப்பாா்கள். நாட்டின் மிகவும் பிரபலமான முதலமைச்சராக விளங்கியவா் அரவிந்த் கேஜரிவால். ஆனால், பாஜக அரசு அவரை முற்றிலும் சட்டவிரோதமாகக் கைது செய்து, தில்லி அரசைக் கவிழ்க்கவும் சதி செய்தது.

மேலும், கடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் நாங்கள் வென்றதை விட அதிக இடங்களில் இம்முறை வெற்றி பெறுவோம். தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற கேஜரிவாலின் உத்தரவாதம் நிரூபிக்கப்படும்.

எனவே, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் சஞ்சய் சிங்.

முழு கட்டுரையைப் படிக்க →