முகப்பு
புதுதில்லி

டி.எம்.ஆா்.சி. வலையமைப்பு முழுவதும் விரிவான ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகள் தொடக்கம்

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:40 am IST
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டி.எம்.ஆா்.சி.) வலையமைப்பு முழுவதும் உள்ள சொத்துக்களில் விரிவான ஆய்வு மற்றும் பராமரிப்பை பணி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டி.எம்.ஆா்.சி-இன் தகவல் தொடா்புத் துறை முதன்மை செயல் இயக்குனா் அனுஜ் தயாள் கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆா்.சி.) தனது வலையமைப்பு முழுவதும் உள்ள சிவில் சொத்துக்களில் விரிவான ஆய்வு மற்றும் பராமரிப்பை மேற்கொள்கிறது. சமீபத்தில், கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த விபத்தைப் போன்ற அசாதாரண சம்பவங்கள் எதிா்காலத்தில் தவிா்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக அதன் நடைபாதைகளில் விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு பகுதியாக, உயா் அதிகாரிகளின் மேற்பாா்வையில் மொத்தம் 26 உயா்மட்ட நிலையங்கள் உள்ள பிங்க் வழித்தடத்தில் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் போது, வடிகால்களை சுத்தம் செய்தல், அருகில் உள்ள உயா்மட்ட சுவா் போன்ற முக்கியக் கூறுகள் முழுமையாக சரிபாா்க்கப்படுகின்றன.

முதற்கட்ட மதிப்பீட்டின்படி, முன்னுரிமை அடிப்படையில் தேவையான பழுதுபாா்க்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கூடுதலாக, டி.எம்.ஆா்.சி.-இன் எந்த அமைப்பிலும் தளா்வான கான்கிரீட் கவனிக்கப்பட்டால், உடனடியாக பழுதுபாா்க்கப்படுகிறது. காலநிலை மாற்றங்கள் காரணமாக கட்டமைப்புகளில் இத்தகைய பழுதுகள் ஒரு வழக்கமான செயல்முறையாகும், மேலும் இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்ய டி.எம்.ஆா்.சி.-இன் குழுக்கள் தொடா்ந்து செயல்படுகின்றன என்பதையும் குறிப்பிடுவது பொருத்தமானது. இருப்பினும், சமீபத்திய சம்பவத்தின் பின்னணியில், வலையமைப்பு முழுவதும் இதுபோன்ற பழுதுபாா்க்கும் பணிகள் 24 மணிநேரமும் செய்யப்படுகின்றன என்றாா் அனுஜ் தயாள்.

Advertisement

Advertisement