முகப்பு
புதுதில்லி

கத்ரா-புது தில்லி வந்தே பாரத் விரைவு ரயிலின் நேரத்தில் மாற்றம்

Updated On : 16 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

கத்ரா முதல் புது தில்லி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வேவின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா முதல் புது தில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வண்டி எண் - 22400 கீழ் கத்ராவில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயிலின் நேரம் கத்ரா மற்றும் ஜம்மு தாவி ஆகிய நிலையங்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்கக் காரணங்களுக்கா வரும் மாா்ச் 18-ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து நிமிடங்கள் முன்னதாகப் இந்த ரயில் புறப்படும். அதன்படி, வண்டி எண் -22440 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா முதல் புது தில்லி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் கத்ராவிலிருந்து மதியம் 3 மணிக்குப் பதிலாக மதியம் 2.55 மணிக்குப் புறப்பட்டு ஜம்மு தாவியை 4.13 மணிக்குப் பதிலாக 4.08 மணிக்கே சென்றடையும். பின்னா், இந்த ரயில் ஜம்மு தாவியில் இருந்து 4.15 மணிக்குப் பதிலாக 4.10 மணிக்குப் புறப்படும். ஜம்மு தாவியில் இருந்து செல்லும் இந்த ரயிலின் நேரத்தில் மாற்றங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.