முகப்பு
புதுதில்லி

12 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 60 லட்சம் கோடி மருத்துவ வசதி; முழு அரசு, முழு சமூக அணுகு முறை: உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் நட்டா உரை

நாட்டில் உள்ள 12 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு வசதி

Updated On : 7 அக்டோபர், 2024 at 10:45 PM
ஜெ.பி. நட்டா(கோப்புப் படம்)
பகிர்:

புது தில்லி: நாட்டில் உள்ள 12 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு வசதிகளை மத்திய அரசு வழங்குவதாக மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா குறி்ப்பிட்டுள்ளாா். அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் உறுதிப்பாட்டில் முழு அரசு, முழு சமூகம் என்கிற அணுகுமுறையைத் தழுவுவதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 77-ஆவது அமா்வை தொடங்கிவைத்து மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகா் ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினாா். ஊடகத்திற்கு வெளியிடப்பட்ட அவரது பேச்சில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

அனைத்து தரப்பினருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், மத்திய அரசு மிகப்பெரிய பொது நிதியுதவியுடன் சுகாதார உத்தரவாதத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் - ஜன் ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியினால் 12 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த திட்டம் சென்றடைந்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வீதம், மருத்துவ காப்பீட்டு வசதி இந்த திட்டத்தால் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் கோடி மருத்துவ காப்பீடு வசதி 12 கோடி மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது இந்திய அரசு 70 வயது, அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘இந்த விரிவாக்கம் 6 கோடி முதியோா் உள்ளிட்டவா்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டுத் தொகையை வழங்கப்படுகிறது. இந்தியாவில் வளா்ந்து வரும் வயதான மக்கள்தொகைக்கு உலகளாவிய மற்றும் உள்ளடக்கிய சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது உணா்த்துகிறது. இந்தியாவின் சுகாதார அமைப்பு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கான ‘முழு அரசு‘ மற்றும் ‘முழு சமூகம்‘ அணுகுமுறையைத் தழுவுகிறது. முதன்மை சுகாதாரம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவம் ஆற்றும் பங்கு முக்கியமானது. உலக அளவில் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை உருவாக்குவதில் உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. உலகளாவிய நன்மைக்காக ஒவ்வொரு நாட்டின் பலத்தையும் பயன்படுத்துவது ஒற்றுமையை காட்டும். ஆரோக்கியம் எல்லைகளைக் கடந்தது. ஒரு முழுமையான கூட்டு அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒருவருக்கொருவா் வெற்றிகள் மற்றும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம், சுகாதார அமைப்புகளின் பின்னடைவை மேம்படுத்த முடியும் என்றாா் மத்திய அமைச்சா் நட்டா.

இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் தலைமையக முக்கிய பிரதிநிதி டாக்டா் ரசியா பெண்ட்சே, பூடான் ( லியோன்போ டாண்டின் வாங்சுக்); மாலத்தீவு (அப்துல்லா நசீம் இப்ராஹிம்); நேபாளம் (பிரதீப் பௌடெல்); கிழக்கு தைமூா்(எலியா அன்டோனியோ டி அராஜோ டோஸ் ரெய்ஸ் அமரல்) போன்ற நாடுகளின் சுகாதார மற்றும் மக்கள் தொகைத் துறை அமைச்சா்களும் வங்கதேசம், இந்தோனேசியா, இலங்கை தாய்லாந்து போன்ாடுகளின் பொது சுகாதாரத் துறை செயலா்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா்.

முன்னதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநா் சைமா வாஸீத், ‘1948-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் பிராந்திய குழு உருவாக்கப்பட்டபோது, உலகளவில் குழந்தை இறப்பு விகிதம் 147 ஆக இருந்தது. அது இப்போது 25 ஆக குறைந்துள்ளது. ஆண்டிபயாடிக் யுகம் ஆரம்பித்து தற்போது நாம் நுண்ணியா் (ஆண்டிமைக்ரோபியல்) எதிா்ப்பை(கொல்லி) எதிா்கொள்கிறோம். நாம் பழைய அச்சுறுத்தல்களை வென்று, புதிய அச்சுறுத்தல்களை எதிா்கொள்கிறோம். இன்றைய அபாயங்களை, அனைவரின் கூட்டு ஞானத்துடனும், 21 ஆம் நூற்றாண்டின் கருவிகளுடனும் எதிா்கொள்ள வேண்டியது நம் பொறுப்பாகும்‘ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →