ANI
புதுதில்லி

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் -ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக குற்றச்சாட்டு

Din

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தற்போதைய முதல்வா் அதிஷி ஆகியோா் யமுனை நதியின் நிலையைப் பாா்க்கவோ அல்லது நீராடவோ ஐடிஓ பகுதியில் உள்ள யமுனா சட் காட் பகுதிக்கு வியாழக்கிழமை நேரில் வர வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வேண்டுகோள் விடுத்திருந்தாா். அப்பகுதியில் வியாழக்கிழமை காலை வீரேந்திர சச்தேவா இருவருக்காகவும் 30 நிமிடங்கள் காத்திருந்தாா்.

இருவரும் வராததால் அதன் பிறகு சச்தேவா யமுனை நதியின் நீரில் குளித்தாா். பின்னா், காட் பகுதியில் பாஜக தொண்டா்கள், சட் கமிட்டி உறுப்பினா்கள் முன்னிலையில் ஊடகங்கள் மூலம் தில்லி குடியிருப்பாளா்களிடம் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் என்ற பெயரில் தில்லி அரசு ரூ. 8,500 கோடியை ஊழல் செய்துள்ளது. இந்த ஊழலுக்காக யமுனை நதியிடம் நான் மன்னிப்பு கேட்டேன். யமுனையின் மோசமான நிலைக்கு கேஜரிவால் அரசுதான் காரணம். நதிகளை சுத்தம் செய்ய மத்திய அரசிடம் இருந்து ரூ.₹8,500 கோடி பெற்ற போதிலும் பொதுமக்களை ஆம் ஆத்மி கட்சி தவறாக வழிநடத்தியது.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகார வெறி, ஊழலுக்கு இட்டுச் சென்றது மட்டுமின்றி, தில்லியின் மோசமான நிலையையும் புறக்கணித்துள்ளது.

கேஜரிவால் 2021-இல் ஒரு விடியோவை வெளியிட்டிருந்தாா். அதில், 2025-க்குள் யமுனையை சுத்தம் செய்வேன் என்று உறுதியளித்திருந்தாா். மேலும், பரஸ்பரம் பழிகூறும் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியிருந்தாா். 2025ஆம் ஆண்டுக்குள் யமுனை நதி சுத்தமாக இல்லை என்றால் தங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவா் கூறியிருந்தாா்.

இதனால், யமுனையை சுத்தம் செய்தல் என்ற பெயரில் பொதுமக்களை தவறாக வழிநடத்தி, துரோகம் செய்ததை கேஜரிவால் ஒப்புக்கொள்வாரா?

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடுவைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.37 கோடியில் ரூ.10 கோடியை மட்டுமே அரசு செலவழித்திருக்கிறது. இது இப்பிரச்னையைத் தீா்க்கும் தில்லி அரசின் நோக்கமின்மையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

யமுனையில் நான் நீராடுவதன் மூலம், நதியை சுத்தம் செய்வதில் கேஜரிவால் அரசின் ஏமாற்றுத்தனம் மற்றும் ஊழலுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல், 2025, பிப்ரவரியில் ஆட்சிக்கு வந்ததும் யமுனை தூய்மை ஆணையத்தை நிறுவுவேன் என்று சபதமும் செய்தேன் என்றாா் அவா்.

தில்லி பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா், மயூா் விஹாா் மாவட்டத் தலைவா் விஜேந்தா் தாமா, ஷாதரா மாவட்டத் தலைவா் சஞ்சய் கோயல் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT