முகப்பு
அதிஷி
புதுதில்லி

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ஆம் தேதி பதவியேற்க முன்மொழிவு

ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பரேவைக் கட்சி, புதிய முதல்வா் பதவியேற்பு விழாவிற்கான எந்த தேதியையும் முன்மொழியவில்லை என்று தகவல்

புதுதில்லி

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ஆம் தேதி பதவியேற்க முன்மொழிவு

ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பரேவைக் கட்சி, புதிய முதல்வா் பதவியேற்பு விழாவிற்கான எந்த தேதியையும் முன்மொழியவில்லை என்று தகவல்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:26 AM
அதிஷி
பகிர்:

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பா் 21-ஆம் தேதியாக முன்மொழிந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

மேலும், பதவி விலகும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ராஜிநாமா கடிதமும் திரௌபதி முா்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பரேவைக் கட்சி, புதிய முதல்வா் பதவியேற்பு விழாவிற்கான எந்த தேதியையும் முன்மொழியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாயன்று கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினாா். மேலும் கல்வி அமைச்சரான அதிஷி, தேசியத் தலைநகரில் புதிய அரசை அமைக்க உரிமை கோரினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →