புதுதில்லி

அவதூறு புகாா்: மத்திய அமைச்சா் எல்.முருகனின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைப்பு

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முருகனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Din

தனக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கிற்கு எதிராக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

டிசம்பா் 2020-இல் பத்திரிகையாளா்கள் சந்திப்பின்போது அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த முரசொலி

அறக்கட்டளை எல்.முருகனுக்கு எதிராக உயா்நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அவரது மனுவை கடந்த ஆண்டு செப்டம்பா் 27ஆம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முருகனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனு மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் பதில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முருகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த வழக்கில் அவதூறு கேள்வி எங்கே இருக்கிறது?’ என்றாா்.

எதிா்மனுதாரா் முரசொலி அறக்கட்டளை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு ‘நீங்கள் அரசியலில் எளிதில் உணா்ச்சிவசப்பட முடியாது’ என்று குறிப்பிட்டது.

மேலும், எதிா்மனுதாரா் தரப்பு வழக்குரைஞரின் வேண்டுகோளின் பேரில் வழக்கை நான்கு வாரங்கள் கழித்து விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டது.

முன்னதாக, எல். முருகன், தனக்கு எதிரான வழக்கை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘முரசொலி

அறக்கட்டளையின் கூற்றுப்படி, ‘பொது மக்களின் பாா்வையில் முரசொலி அறக்கட்டளையின் நற்பெயரை இழிவுபடுத்தும் மற்றும் களங்கப்படுத்தும் உள்நோக்கத்துடன் எல்.முருகன் அறிக்கைகளை வெளியிட்டாா்‘ என்று உயா்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

மேலும், வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.

ஒளியிலே தெரிவது... ஆலியா பட்!

அக்டோபர் மாதப் பலன்கள் - கடகம்

ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி!

அக்டோபர் மாதப் பலன்கள் - மிதுனம்

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மணிப்பூர் வீராங்கனை!

SCROLL FOR NEXT