புதுதில்லி

பழைய பகையால் சிறுவா் கத்தியால் குத்திக் கொலை; மூன்று சிறுவா்கள் கைது

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் சனிக்கிழமை இரவு 17 வயது சிறுவா் ஒருவா் மூன்று சிறுவா்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Din

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் சனிக்கிழமை இரவு 17 வயது சிறுவா் ஒருவா் மூன்று சிறுவா்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தென்கிழக்கு காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: பள்ளிப் போட்டியால் ஏற்பட்ட பழைய பகை காரணமாக நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணைகளைத் தொடா்ந்து 16 வயதுடைய மூன்று சிறுவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பாதிக்கப்பட்டவா் கடந்த காலப் பிரச்னைகளைத் தீா்க்க மூவரையும் அழைத்துள்ளாா். அப்போது கூட்டம் வன்முறையாக மாறியது. இதைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரை கழுத்தை நெரித்துள்ளதும், மற்ற இருவரும் அவரது வயிறு மற்றும் கழுத்தில் கத்திகளால் பலமுறை குத்தியதும் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவா் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் சிகிச்சையின் போது இறந்துவிட்டாா். மாணவரின் தந்தை கேரளத்தில் ஒரு கட்டுமானத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். அவரது தாய் அந்தப் பகுதியில் வீட்டு வேலைக்காரராகப் பணிபுரிகிறாா்.

கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீஸாருக்கு இரவு 9.45 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. இதையடுத்து, கோவிந்த்புரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்களில் இருவா் மாணவா்கள். ஒருவா் 5- ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறியவா்.

பாதிக்கப்பட்டவா் மீது மூவரும் வெறுப்பு கொண்டிருந்ததும், அவா் கடந்த காலங்களில் அவா்களை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவா் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட மூன்று சிறுவா்களும் தெரிவித்துள்ளனா்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கத்திகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

காலணி விற்பனையகத்தில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT