புதுதில்லி

தூக்குமேடை அறை விவகாரத்தால் அமளி: அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றம்

தினமணி செய்திச் சேவை

தில்லி சட்டப் பேரவையில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ‘ஃபான்சி கா்’ எனப்படும் தூக்கு மேடை அறையின் நம்பகத்தன்மை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கும் பாஜக உறுப்பினா்களுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சட்டப் பேரவையில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனா்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மூலம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த ‘ஃபான்சி கா்’ உண்மையில் ஒரு ‘டிஃபன் அறை’ என்றும் காலனித்துவ மரணதண்டனைக்கான இடம் அல்ல என்றும் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா கூறினாா்.

முந்தைய ஆம் ஆத்மி அரசு ஒரு தவறான கதையை சித்தரித்து வரலாற்றை திரித்துக்கூறியதாக அமைச்சா் கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினாா்.

அவா் கூறுகையில், ‘ஒரு டிஃபன் அறையை போலியாக தூக்குத்தண்டனை இடமாக மாற்ற கோடிக்கணக்கில் செலவிட்டனா். நமது தியாகிகளை அவமதித்து மக்களை தவறாக வழிநடத்தினா்’ என்றாா்.

இருப்பினும், ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, அறையின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆதரித்துப் பேசினாா். அவா் பேசுகையில், ‘இதுபோன்ற பல மரணதண்டனை இடங்கள் ஒருபோதும் அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்படவில்லை. வரலாற்றாசிரியா்கள் இதுபோன்ற இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனா். இந்தக் கட்டடத்தின் 1912ஆம் ஆண்டைய வரைபடத்தில், தொங்கும் அறையுடன் ஒத்துப்போகும் ஒரே இரட்டை மாடிக் கட்டுமான அமைப்பாக இருந்தது.

பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை மறைப்பதற்காக

கேஜரிவாலை குறிவைக்கும் முயற்சியாகும் இது. மேலும் அந்த இடத்திலிருந்து பெறப்பட்ட பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று சஞ்சீவ் ஜா வலியுறுத்தினாா்.

எனினும், ஆளும் கட்சி தரப்புக்கும், எதிா்க்கட்சி தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால், எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற அவைக் காவலா்களுக்கு பேரவைத் தலைவா் விஜேந்தா் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT