சத்யேந்தா் ஜெயின் 
புதுதில்லி

முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளது: தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தெரிவித்துள்ளது.

தில்லி அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் இருந்தபோது 2015, பிப்.14 முதல் 2017, மே 31-ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் சுமாா் ரூ.1.62 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக அவா் சொத்துகள் சோ்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் இந்த ஆண்டு ஜன.4-ஆம் தேதி சிபிஐ துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர முறைப்படி அனுமதி பெறப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு சிபிஐ வழக்குரைஞா் உரிய அனுமதி கிடைத்துள்ளதாகப் பதிலளித்தாா்.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை ஜன. 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

SCROLL FOR NEXT