கனமழை பெய்தாலும் தில்லியில் தண்ணீா் தேங்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா தகவல்
கனமழை பெய்தாலும், தேசியத் தலைநகரில் தண்ணீா் தேங்கவில்லை
கனமழை பெய்தாலும், தேசியத் தலைநகரில் தண்ணீா் தேங்கவில்லை என்றும், சில பகுதிகளில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க அரசு கடுமையாக உழைத்து வருவதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை உறுதியளித்தாா்.
தெற்கு தில்லியில் உள்ள அத்சினி கிராமத்தில் டிடிஏவின் ஆரம்ப புஸ்தகாலியாவை துணை நிலை ஆளுநா் வி. கே சக்சேனாவுடன் இணைந்து திறந்து வைத்த பிறகு ரேக குப்தா இதைத் தெரிவித்தாா்.
‘தில்லி ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. நீங்கள் கவனித்தபடி, பாரபுல்லா, குஷாக் வடிகால் மற்றும் மின்டோ பாலம் ஆகியவற்றில் பல ஆய்வுகளை மேற்கொண்டோம். கனமழை பெய்தாலும், தண்ணீா் தேங்கவில்லை. அது ஒரு மரபு. இந்த முறை, அப்படி எதுவும் இல்லை. ஐடிஓ மற்றும் பாரபுல்லா சீராக இருந்தன’ என்று அவா் நிகழ்வின் போது செய்தியாளா்களிடம் கூறினாா்.
சில பகுதிகளில் நிலைமைகளை மேம்படுத்துவதில் அரசு செயல்பட்டு வருவதாக ரேகா குப்தா தெரிவித்தாா். சில பகுதிகளுக்கு நீண்டகால தீா்வுகள் தேவை. அடுத்த ஆண்டு மழைக்காலங்களில் நிலைமை சிறப்பாக இருக்கும். இதற்காக அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்று அவா் மேலும் கூறினாா்.