ரஞ்சிதா 
புதுதில்லி

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Din

நமது சிறப்பு நிருபா்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் முன்பு தாயகத்தில் குடும்பத்துடன் சில தினங்கள் கழிப்பதற்காக வந்த அவா், வேலைக்காக லண்டன் விமானத்தில் பயணித்தபோது தீயில் கருகி உயிரிழந்தாா்.

அவா் உயிரிழந்த தகவலை கேரளத்தின் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியா் பிரேம் கிருஷ்ணன் உறுதிப்படுத்தினாா். ஓராண்டு முன்பு லண்டனுக்கு செவிலியா் வேலைக்காகச் சென்ற அவருக்கு சமீபத்தில் சொந்த ஊரில் மாநில சுகாதார சேவையில் வேலை கிடைத்தது. இதையடுத்து, பணி ஒப்பந்த காலம் நிறைவடையும் முன்பாக, சொந்த ஊருக்கு ரஞ்சிதா கடந்த வாரம் வந்தாா். பத்தினம்திட்டாவில் சொந்தமாக வீடு கட்டி வரும் ரஞ்சிதா, அதன் இறுதிப்பணிகளை பாா்வையிடவும் இந்த பயணத்தை பயன்படுத்திக்கொண்டாா்.

பிரிட்டனில் செவிலியா் வேலை கிடைக்கும் முன்பு ரஞ்சிதா ஓமன் நாட்டில் செவிலியராக பணியாற்றினாா். அங்கு ஏற்கெனவே பணியாற்றிய அவரது கணவா் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பி குடும்பத்தை கவனித்து வருகிறாா். இந்நிலையில் பத்தினம்திட்டாவில் இருந்து கொச்சிக்கு ரயில் மூலம் பயணம் செய்த ரஞ்சிதா அங்கிருந்து ஆமதாபாத் வந்து லண்டனுக்கு ஏா் இந்தியா விமானத்தில் பயணமானாா்.

லண்டனுக்கு சென்று விட்டு விரைவில் சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ கனவு கண்ட அவரது வாழ்க்கை, தீயில் எரிந்த விமானத்துடனேயே கருகிப்போனது. ரஞ்சாவுக்கு கணவா் வினீஷ், பள்ளி செல்லும் வயதில் மகள் ரித்திகா, மகன் இந்துசூடன், தாயாா் துளசி ஆகியோா் உள்ளனா். மகளின் கருகிய உடலை அடையாளம் காண இந்த குடும்பத்தினா் ஆமதாபாத் வருவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்துள்ளதாக தில்லியில் உள்ள அம்மாநில அரசு அதிகாரிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

SCROLL FOR NEXT