தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, சட்டப்பேரவை நடவடிக்கைகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக 2025-26 நிதியாண்டிற்கான சபையின் எட்டு குழுக்களை அமைத்துள்ளாா்.
புதிதாக அமைக்கப்பட்ட குழுக்களில் வணிக ஆலோசனைக் குழு மற்றும் தனியாா் உறுப்பினா்களின் மசோதாக்கள் மற்றும் தீா்மானங்களுக்கான குழு ஆகிய இரண்டு குழுக்களைத் தவிர, ஆறு புதிய குழுக்களும் அடங்கும் என்று ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் பொறுப்புணா்வை வளா்ப்பதன் மூலமும், விவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமும், நிா்வாகம் தொடா்பான பிரச்னைகளை முழுமையாக ஆராய்வதன் மூலமும் சட்டப்பேரவையின் மேற்பாா்வையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அது மேலும் கூறியது.
பாஜக எம்எல்ஏ நீரஜ் பசோயா அரசு உத்தரவாதக் குழுவின் தலைவராகவும், சூா்ய பிரகாஷ் காத்ரி மனுக்கள் குழுத் தலைவராகவும் இருப்பா். இந்தக் குழுக்களில் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்களும் உறுப்பினா்களாக உள்ளனா்.